காக்னிசென்ட் வழியில் இன்ஃபோசிஸ்... சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகிறது!

ஐடி தொழிற்துறையைப் பொறுத்தவரையில் கடந்த சில ஆண்டுகளாகவே பணி நீக்கம் அதிகப்படியாகவே நடந்து வருகிறது.

காக்னிசென்ட் வழியில் இன்ஃபோசிஸ்... சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகிறது!
இன்ஃபோசிஸ்
  • News18
  • Last Updated: November 5, 2019, 5:21 PM IST
  • Share this:
காக்னிசென்ட் நிறுவனத்தைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனமும் சுமார் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளது.

செலவைக் குறைக்க, குறிப்பாக மத்திய மற்றும் உயர் பதவிகளில் இருக்கும் அதிகரிகளையே இந்நிறுவனங்கள் அடுத்த மூன்று மாத காலகட்டத்துக்குள் பணி நீக்கம் செய்ய உள்ளது. உயர் பதவிகளான சீனியர் மேனேஜர் போன்ற அந்தஸ்தில் உள்ளோரில் சுமார் 2,200 பேர் தங்களது வேலையை இழக்க உள்ளனர்.

இதேபோல், மத்திய நிலைப் பதவிகளில் உள்ளோரில் சுமார் 4000- 10000 பேர் வரையில் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்பட உள்ளனர். தலைமை அதிகாரிகளுள் 50 பேர் வரையில் பணிநீக்கம் செய்யப்படலாம். ஐடி தொழிற்துறையைப் பொறுத்தவரையில் கடந்த சில ஆண்டுகளாகவே பணி நீக்கம் அதிகப்படியாகவே நடந்து வருகிறது.


மேலும் பார்க்க: வீடுகள் விற்பனை சரிவு... தமிழக நகருக்கு சரிவில் முதலிடம்..!

திருவள்ளுவருக்கு காவி உடை... சர்ச்சையை ஏற்படுத்திய தமிழக பாஜக..!
First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்