• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு ஜாக்பாட்... முக்கிய அதிகாரிகளுக்கு கோடிகளில் ஊக்கத்தொகை!

இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு ஜாக்பாட்... முக்கிய அதிகாரிகளுக்கு கோடிகளில் ஊக்கத்தொகை!

2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பெற்ற 4,110 கோடி ரூபாய் நிகர லாபத்தை விட மூன்றாம் காலாண்டில் 12.2 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பெற்ற 4,110 கோடி ரூபாய் நிகர லாபத்தை விட மூன்றாம் காலாண்டில் 12.2 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவின் மிகப் பெரிய ஐ.டி. சேவைகள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் தனது ஊழியர்களுக்கு திறன் சார்ந்த ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

அதில் இன்ஃபோசில் தலைமை நிர்வாக அதிகாரியான சலில் பரேக் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஊக்கத்தொகையாக பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்தப்படியாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவின் ராவ் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஊக்கத்தொகையாக பெற்றுள்ளார்.

மேலும் 2018-2019 நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கும் மிகப் பெரிய தொகைகளை ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக பங்குகளாக வழங்கும்போது நிறுவனத்தின் மீதான அவர்களது கவனம் அதிகரிக்கிறது. தங்களது பங்குகள் நன்கு வளர்ந்து சிறந்த லாபத்தை பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்று கூறுகின்றனர்.

இன்ஃபோசிஸ் போர்டு உறுப்பினர்கள் மொத்தம் 5 கோடி பங்குகளை ஊழியர்களுக்கு பங்குகளாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதில் எவ்வளவு ஊழியர்கள் பயன்பெறுகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் பார்க்க:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: