இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் நிர்வாக இயக்குனர் (எம்டி) ஆன சலில் பரேக்கின் மொத்த காம்பென்ஸேஷன் - 2020 - 2021 நிதியாண்டில் 43 சதவீதம் அதிகரித்ததால் - அவரின் சம்பளம் ரூ.71.02 கோடியாக உயர்ந்துள்ளது. அவரது சம்பளத்தில் பாதிக்கும் மேலானது அவரது ஸ்டாக் ஆப்ஷன் மூலம் கிடைத்துள்ளதாக சாப்ஃட்வேர் மேஜரின் சமீபத்திய வருடாந்திர அறிக்கை சுட்டி காட்டுகிறது. இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம் கடந்த 2020 - 2021 இல் மொத்தம் ரூ.49.68 கோடிகளாகவும், 2019 - 2020 இல் ரூ.34.27 கோடிகளாகவும் இருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
2021-22 ஆம் ஆண்டில் பரேக்கின் காம்பென்ஸேஷனில் ரூ.5.69 கோடி பேஸிக் சேலரி, ரூ.0.38 கோடி ஓய்வூதியப் பலன்கள், ரூ.12.62 கோடி போனஸ் மற்றும் ஊக்கத்தொகைகள் மற்றும் ஸ்டாக் ஆப்ஷன்களின் அடிப்படையில் ரூ.52.33 கோடி பெர்க்விசிட்கள் ஆகியவை அடங்கும் என்று வெளியான ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. இன்ஃபோசிஸ் சிஇஓ கடந்த நிதியாண்டில் 2015 ஸ்டாக் ஆப்ஷன் திட்டத்தின் கீழ் 2,29,792 ஸ்டாக் யூனிட்களையும், 2019 திட்டத்தின் கீழ் 1,48,434 யூனிட்களையும் பயன்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் மற்றொரு மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பம் அல்லது தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் கோபிநாதன், 2021 - 2021ல் ரூ.25.76 கோடி சம்பளப் பேக்கேஜைப் பெற்றுள்ளார். இன்ஃபோசிஸ் நான்-எக்ஸிக்யூட்டிவ் தலைவர் ஆன நந்தன் நிலேகனி, 2021 - 2022 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்காக வழங்கிய தனது சேவைகளுக்கு எந்த ஊதியமும் வேண்டாம் என்று தானாகவே முன்வந்து தேர்வு செய்ததாகவும் வெளியான அறிக்கை கூறுகிறது.
Also Read : புதிய விதியின்படி இனி வங்கியில் கேஸ் எடுக்க, டெபாசிட் செய்ய இது அவசியம்
சலில் பரேக்கின் கீழ் இன்ஃபோசிஸின் அசாதாரண செயல்திறன்: சலில் பரேக் கடந்த ஜூலை 1, 2022 முதல் மார்ச் 31, 2027 வரை என்கிற ஐந்தாண்டு காலத்திற்கு நிறுவனத்தின் சிஇஓ மற்றும் எம்டி ஆக மீண்டும் நியமிக்கப்பட்டார். நிறுவனத்தின் வலுவான செயல்திறனைக் கருத்தில் கொண்டு அவரை மறு நியமனம் செய்ய நிறுவனம் பரிந்துரைத்தது.
இன்ஃபோசிஸின் சந்தை மூலதனம் அவரது பதவிக் காலத்தில் ரூ.5,77,000 கோடியாக அதிகரித்துள்ளதாக ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. சலீலின் தலைமையின் கீழ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியானது ரூ.70,522 கோடியிலிருந்து (2018) ரூ.1,21,641 கோடியாக வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் லாபமும் ரூ.16,029 கோடியில் இருந்து ரூ.22,110 கோடியாக அதிகரித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.