• HOME
 • »
 • NEWS
 • »
 • business
 • »
 • தொழில்துறை உற்பத்தி மே மாதத்தில் 29 சதவீதம் உயர்வு

தொழில்துறை உற்பத்தி மே மாதத்தில் 29 சதவீதம் உயர்வு

தொழில்துறை உற்பத்தி

தொழில்துறை உற்பத்தி

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கம் கொண்டதாக அமையும்.

 • Share this:
  2021 மே மாதத்தில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் 116.6 புள்ளிகளாக இருந்தது. இது, கடந்த ஆண்டு மே மாதத்துடன் (90.2 புள்ளிகள்) ஒப்பிடுகையில், 29.3 சதவீதம் அதிகம்.

  உற்பத்தி துறை, சுரங்கம், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி சிறப்பாக இருந்ததால், இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலையை எட்டவில்லை. 2019ஆம் ஆண்டு மே மாதம் இருந்த 135.4 புள்ளிகளுடன் ஒப்பிடுகையில், இது குறைவானதாகும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், நாட்டின் ஆன்லைன் வர்த்தக சந்தையை மக்கள் பயன்படுத்தும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டில், ஏறக்குறைய 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சந்தையாக அது உயரும் என இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான, பிக்கி தெரிவித்துள்ளது.

  இது குறித்து பிக்கி, ‘இது நாள் வரை, ஆன்லைன் வர்த்தகத்தை ஒரு மாற்று வாய்ப்பாகவே நுகர்வோர் பார்த்து வந்தனர். ஆனால், இப்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் வர்த்தகத்தை பிரதான வாய்ப்பாகவே கருத துவங்கி உள்ளனர். ‘பரிவர்த்தனை’ என்ற நிலையிலிருந்து, ‘நம்பிக்கை’ என்ற நிலைக்கு, ஆன்லைன் வர்த்தகம் மாறியுள்ளது.

  கடந்த 2020ஆம் ஆண்டு, ஆன்லைன் வர்த்தக சந்தையின் மதிப்பு 4.80 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது கொரோனா பரவலுக்கு பின்னர், ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இது 2025ஆம் ஆண்டில், 14.10 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், “கொரோனாவின் மூன்றாவது அலை வந்தால் அதை எதிர்கொள்வதற்கு அரசு தயாராக உள்ளது என்றே நான் கருதுகிறேன். மூன்றாவது அலையைப் பொறுத்தமட்டில் பொருளாதாரத்தில் இரண்டாவது அலையின்போதும், முதல் அலையின் தொடக்கத்திலும் ஏற்பட்ட தாக்கத்தை விட குறைவாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.அரசின் தயார் நிலை இங்கு குறிப்பிடத்தகுந்தது. மாநிலங்களும் தகுந்த படிப்பினைகளைப் பெற்றுள்ளன.

  Read More : ஜெயலலிதா சமாதிக்குச் செல்லும் சசிகலா... அனல் பறக்கும் அடுத்த மூவ்!

  கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில், சுகாதாரத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்துக்கு இடையில், சந்தைகள் மிதமாக உள்ளன. அவை புதிய உயரங்களைத் தொட்டுள்ளன. இந்த போக்கு தொடருவதோடு மட்டுமின்றி, நாம் முன்னோக்கி செல்வதை பலப்படுத்தும். வெளிநாட்டு அன்னிய நேரடி முதலீட்டில் 2020-21 மற்றும் 2021-22 ஏப்ரல்-ஜூன் மாத கால கட்டத்தில் புதிய சாதனை காணப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான புதிய தொடக்க நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பங்கு விற்பனைத் துறை சூழல் நன்றாகவே இருக்கிறது. இந்த துறையில் இலக்கு முழுமையாக அடையப்படும்.

  Must Read : உயிருக்கு போராடிய மூதாட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற பெண் காவல் ஆய்வாளர்- குவியும் பாராட்டுகள்

  இந்திய பொருளாதார மீட்பு என்பது மிகவும் வலுவாக உள்ளது. இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி கீழ்நோக்கி செல்லும் என்று கணித்து இருந்த நிறுவனங்கள் அவற்றை மீண்டும் மேல்நோக்கி மாற்றி அமைக்க வேண்டியதிருக்கும். ஏனென்றால் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கம் கொண்டதாக அமையும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: