Home /News /business /

ஹேப்பி நியூஸ்... பாமாயில் விலை குறைய வாய்ப்பு; காரணம் இதுதான்

ஹேப்பி நியூஸ்... பாமாயில் விலை குறைய வாய்ப்பு; காரணம் இதுதான்

பாமாயில்

பாமாயில்

Palm Oil | உலக எண்ணெய் சந்தையின் மொத்த தேவையில் 3 மடங்கு தேவையை பாமாயில் நிவர்த்தி செய்கிறது. இதில், இந்தோனேசியாவில் இருந்து மட்டும் 60 சதவீத அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உள்நாட்டில் பாமாயில் விநியோகம் சீரான நிலையை எட்டியதை தொடர்ந்து, பாமாயிலுக்கான தடையை திங்கள்கிழமை (மே 23) முதல் இந்தோனேசியா விலக்கிக் கொள்வதாக அந்நாட்டு அதிபர் ஜோகோ விடூடூ தெரிவித்துள்ளார். உலகின் மாபெரும் பாமாயில் ஏற்றுமதியாளராக இந்தோனேசியா நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி குறைவு மற்றும் விநியோகத்தில் தடங்கல் போன்ற காரணங்களால் உள்நாட்டில் பாமாயில் விலை உயர்ந்ததை தொடர்ந்து ஏற்றுமதிக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. பாமாயில் ஏற்றுமதிக்கான தடை விலக்கப்படுவது குறித்து வீடியோ மூலமாக நாட்டு மக்களுக்கு அதிபர் ஜோகோ விடூடூ உரையாற்றியுள்ளார்.

இந்தோனேசியாவில் பாமாயில் உற்பத்தி துறையில் சுமார் 17 மில்லியன் பணியாளர்கள் உள்ளனர். பாமாயில் உற்பத்தி தான் இவர்களது பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இதற்கிடையே, உள்நாட்டில் பாமாயில் விலை உயர்ந்து வந்ததால், அதன் விலையை லிட்டருக்கு 14,000 ரூபியா (ரூ.74.13) என்ற அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த இலக்கை தற்போது அடையவில்லை என்றாலும் கூட, மீண்டும் ஏற்றுமதியை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஜோகோ விடூடூ அறிவித்துள்ளார்.



உள்நாட்டு தேவைக்கு மிகுதியாக உற்பத்தி

அதிபர் ஜோகோவி இதுகுறித்து கூறுகையில், “இந்தோனேசிய சந்தையின் தேவைக்கு அதிகமாக தற்போது உற்பத்தி பெருகியிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்பு சராசரியாக லிட்டர் 19,800 ரூபியா (104.85) என்ற அளவில் விற்பனையாகி வந்தது. தடை விதிக்கப்பட்ட பிறகு ஒரு லிட்டர் விலை சராசரியாக 17,200 ரூபியா முதல் 17,600 ரூபியா (ரூ.91.09 முதல் ரூ.93.21) என்ற அளவில் இருக்கிறது’’ என்று கூறினார்.

Also Read : ஒரு லிட்டர் பால் ரூ.7 ஆயிரம்.. இனி கழுதை மேய்ப்பது அவமானம் அல்ல

விவசாயிகளின் போராட்டத்தால் நடவடிக்கை

வீடுகளில் சமையலுக்கு மிக அதிகமாக பயன்படுத்தப்படும் பாமாயில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் பொருட்டு ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்திருந்தது. ஆனால், தடை காரணமாக தங்கள் பனை வித்துகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் போராட்டம் நடத்தியதன் காரணமாக ஏற்றுமதிக்கு அரசு அனுமதி வழங்குகிறது.



தடுமாறி வரும் சர்வதேச சமூகம்

சர்வதேச நாடுகளுக்கு மாபெரும் அளவில் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக உக்ரைன் இருந்து வந்தது. அந்நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்ததன் காரணமாக உலக அளவில் சூரியகாந்தி எண்ணெய் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது.

Also Read : டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி அறிக்கை!

இதன் எதிரொலியாக பாமாயிலுக்கான தேவை அதிகரித்த நிலையில், அதன் விலை தொடர்ந்து ஏற்ற நிலையில் இருக்கிறது. உலக எண்ணெய் சந்தையின் மொத்த தேவையில் 3 மடங்கு தேவையை பாமாயில் நிவர்த்தி செய்கிறது. இதில், இந்தோனேசியாவில் இருந்து மட்டும் 60 சதவீத அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாம் ஆயில் ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தோனேசியா நீக்கி உள்ளதால் அதன் விலை மீண்டும் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Cooking Oil, Indonesia

அடுத்த செய்தி