மிகவும் மலிவான பாதுகாப்பான விமான சேவை- சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே நிறுவனம்!

இந்தியாவின் பெரிய ஏர்லைன் நிறுவனமாக உள்ள இண்டிகோவுக்கு இங்கு 250 விமானங்கள் உள்ளன.

மிகவும் மலிவான பாதுகாப்பான விமான சேவை- சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே நிறுவனம்!
இண்டிகோ
  • News18
  • Last Updated: January 21, 2020, 6:36 PM IST
  • Share this:
சர்வதேச அளவில் மிகவும் மலிவான பாதுகாப்பான விமான சேவையை வழங்கும் ஒரே இந்திய நிறுவனம் என்ற அங்கீகாரத்தை இண்டிகோ விமான நிறுவனம் பெற்றுள்ளது.

உலகளவிலான தர வரிசைப் பட்டியலில் ஐந்தாம் இடத்தை இண்டிகோ நிறுவனம் பெற்றுள்ளது. 2019-ம் ஆண்டுக்கான தர வரிசைப் பட்டியலை சர்வதேச நிறுவனமான ஏர்லைன்ரேட்டிங்ஸ்.காம் நிறுவனம் வகுத்துள்ளது. இப்பட்டியலில் மிகவும் மலிவான, பாதுகாப்பான விமானப் பயணத்தைத் தரும் நிறுவனங்களுள் ஏர் அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தை ஃப்ளைப் (பிரிட்டன்), மூன்றாம் இடத்தை ஃப்ரான்டியர் (அமெரிக்கா), நான்காம் இடத்தை ஹெச்கே எக்ஸ்பிரஸ் (ஹாங்காங்) ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. விலை மலிவான பயணங்களை அளித்தாலும் இண்டிகோ விமானங்கள் பாதுகாப்பைப் பொறுத்த வரையில் 5-க்கு 4 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.


மொத்தமாக 1,000 அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு டாப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தர நிர்ணயம் நடத்தப்படுகிறது. இந்தியாவின் பெரிய ஏர்லைன் நிறுவனமாக உள்ள இண்டிகோவுக்கு இங்கு 250 விமானங்கள் உள்ளன.

மேலும் பார்க்க: பெரும் முதலீட்டுடன் இந்தியாவுக்கு வந்திறங்கியுள்ள அமேசான் தலைவர் ஜெஃப் பீசோஸ்!
First published: January 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்