இண்டிகோவின் அட்டகாசமான ஆஃபர்: ரூ.877 முதல் தொடங்கும் விமான கட்டணம்!

இண்டிகோவின் அட்டகாசமான ஆஃபர்: ரூ.877 முதல் தொடங்கும் விமான கட்டணம்!

இண்டிகோவின் ஆஃபர் கட்டணத்தை தவிர்த்து HSBC மற்றும் IndusInd கிரெடிட் கார்டுகளில் டிக்கெட் புக்கிங் செய்தால் கூடுதலாக கேஷ்பேக்கும் கிடைக்கும்.

இண்டிகோவின் ஆஃபர் கட்டணத்தை தவிர்த்து HSBC மற்றும் IndusInd கிரெடிட் கார்டுகளில் டிக்கெட் புக்கிங் செய்தால் கூடுதலாக கேஷ்பேக்கும் கிடைக்கும்.

  • Share this:
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான சேவை வழங்கும் நிறுவனமான இண்டிகோ, ரூ.877 முதல் தொடங்கும் கட்டணத்தில் உள்ளூர் விமான சேவையை வழங்கும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

ஜனவரி 13ம் தேதி முதல் தொடங்கிய இச்சலுகை ஜனவரி 17ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் இச்சலுகையின் மூலம் ஏப்ரல் 1, 2021 மற்றும் செப்டம்பர் 30, 2021-ற்கு இடையில் விமானப் பயணம் மேற்கொள்ள முடியும்,‘The big fat IndiGo sale’ எனும் தலைப்பிலான இச்சலுகையின் மூதல் 877 ரூபாயில் இருந்து விமானக் கட்டணம் தொடங்குகிறது. இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம் மேற்கண்ட முன்பதிவு பயணங்களை ரத்து செய்பவர்களுக்கு பயணி ஒருவருக்கு ரூ.500 ரத்து கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் விமான சேவையில் குறிப்பிட்ட மார்க்கங்களில் ஒரு வழி மற்றும் இரு வழிப்பயணத்திற்கும் இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல டிக்கெட்கள் அனைத்தும் இருப்பை பொருத்தே வழங்கப்படும் எனவும் இச்சலுகையை பயன்படுத்தி மொத்தமாக புக்கிங்குகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.சலுகை கட்டணத்தில் விமானநிலைய கட்டணம் மற்றும் மாநில அரசின் வரி ஆகியவை சேர்க்கப்படாது.

HSBC மற்றும் IndusInd கிரெடிட் கார்டுகளில் டிக்கெட் புக்கிங் செய்தால் கூடுதலாக கேஷ்பேக்கும் கிடைக்கும். என இண்டிகோ தெரிவித்துள்ளது.HSBC கிரெடிட் கார்டை பயன்படுத்தி டிக்கெட் புக்கிங் செய்தால் 5% கேஷ்பேக், அதாவது அதிகபட்சமாக ரூ.750ஐ பெற முடியும், ஆனால் குறைந்தபட்சம் 3000 ரூபாய்க்கு பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும்.

இதே போல IndusInd Bank கிரெடிட் கார்டை பயன்படுத்தி டிக்கெட் புக்கிங் செய்தால் 12% கேஷ்பேக், அல்லது அதிகபட்சமாக ரூ.5000ஐ பெற முடியும், ஆனால் குறைந்தபட்சம் 3000 ரூபாய்க்கு பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும்.
Published by:Arun
First published: