பிப்ரவரி மாதம் வேலையில்லா திண்டாட்டம் 7.2 சதவீதமாக அதிகரிப்பு: அறிக்கை

வேலையில்லா திண்டாட்டம் குறித்த இந்த அறிக்கையை வெளியிட மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி மாதம் வேலையில்லா திண்டாட்டம் 7.2 சதவீதமாக அதிகரிப்பு: அறிக்கை
வேலையில்லா திண்டாட்டம்
  • News18
  • Last Updated: March 6, 2019, 11:52 AM IST
  • Share this:
2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக 2016-ம் ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் 5.9 சதவீதமாகவே இருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் அதே வேலையில் வேலையைத் தேடும் நபர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது என்று மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திங்க் டாங்க்கின் தலைவர் மகேஷ் வியாஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் வேலைக்குச் செல்பவரின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 400 மில்லியனாக இருந்தது. இதுவே சென்ற ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 406 மில்லியனாக இருந்துள்ளது.


பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வர உள்ள நிலையில் இந்தத் தரவு பிதமர் மோடி தலைமையிலான அரசுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்று தேசிய மாதிரி புள்ளிகள் அமைப்பு ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. மேலும் இந்த அறிக்கையை வெளியிட மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமில்லாமல் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் 2018-ம் ஆண்டு மட்டும் 11 மில்லியன் நபர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். 2016-ம் ஆண்டுப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு சிறு வணிகர்கள் பெறும் அளவில் நட்டம் அடைந்தனர் என்றும் அறிக்கை வெளியிட்டு இருந்தது.ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு பாராளுமன்றத்தில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு வணிகர்கள் பாதித்ததாகத் தங்களிடம் தரவு ஏதுமில்லை என்றும் கூறியது.

மேலும் பார்க்க:
First published: March 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்