காய்கறிகள் விலை அதிகரிப்பால் சில்லறைப் பணவீக்கம் உயர்வு!

news18
Updated: July 13, 2019, 8:18 PM IST
காய்கறிகள் விலை அதிகரிப்பால் சில்லறைப் பணவீக்கம் உயர்வு!
பணவீக்க இலக்கு: ஜனவரி முதல் மார்ச் வரையிலான பணவீக்க இலக்கை 2.8 சதவீதமாக நிர்ணைத்துள்ளனர்.
news18
Updated: July 13, 2019, 8:18 PM IST
கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு சில்லறை பணவீக்கம் ஜூன் மாதம் உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவில் ஜூன் மாதம் சில்லறை பணவீக்கம் 3.18 சதவீதமாக அதிகரித்துள்ளது. மே மாதம் சில்லறை பணவீக்கம் 3.05 சதவீதமாக இருந்தது.

காய்கறி விலை ஜூன் மாதம் அதிகரித்ததால் பணவீக்கம் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பணவீக்கம் அதிகரித்திருந்தாலும் மத்திய வங்கியின் இலக்கான 4 சதவீதத்திற்குள் தான் உள்ளது.

எனவே அடுத்த ஆர்.பி.ஐ நாணயக் கொள்கைக் கூட்டத்தில் மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பணவீக்கம் இந்த அளவிற்கு அதிகரித்தற்கு ஜூன் மாதம் காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்கள் விலை அதிகமாக இருந்ததே காரணமாக உள்ளது. மே மாதம் 1.83 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் 2.17 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் பார்க்க:
First published: July 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...