இந்திய இ-காமர்ஸ் துறையின் மதிப்பு 2027-ல் 200 பில்லியன் டாலராக உயரும்: மார்கன் ஸ்டான்லி

இ-காமர்ஸ்

இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது புதிய அந்நிய நேரடி முதலீடு விதிகள் 2019 ஃபிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்திய அரசு இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது புதிய அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிகள் அமலுக்கு வந்ததுள்ளது. இதை அடுத்து இந்திய இ-காமர்ஸ் சந்தை குறித்த தங்களது கணிப்பை மார்கன் ஸ்டான்லி மாற்றி அமைத்துள்ளது.

  முன்பு இந்திய இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு 2026-ம் ஆண்டு 200 பில்லியன் டாலராக உயரும் என்று மார்கன் ஸ்டாலி தெரிவித்திருந்தது.

  ஆனால் சென்ற டிசம்பர் மாதம் இந்தியா புதிய இ-காமர்ஸ் முதலீட்டு விதிமுறைகளின் படி ஆன்லைன் விற்பனையாளர்கள் தாங்கள் பங்கு வைத்திருக்கும் பிற விற்பனையாளர்கள் மூலம் வர்த்தகம் செய்யக்கூடாது என்று அறிவித்தது.

  இதனால் அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வர்த்தகத்தைச் சலுகைகளுடன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் பொருளாதார ஆய்வு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி இந்திய இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு 2027-ம் ஆண்டு 200 பில்லியன் டாலரை எட்டும் என்று கூறியுள்ளது. முன்பு அறிவித்தை விட இது ஒரு வருடம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

  இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது புதிய அந்நிய நேரடி முதலீடு விதிகள் 2019 ஃபிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

  புதிய விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் தங்களது செலவுகள் அதிகரிக்கும். வர்த்தகத்தைத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்துவதில் சிறமம் ஏற்படும் என்றும் கூறிவருகின்றனர்.

  மேலும் பார்க்க: பாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி
  Published by:Tamilarasu J
  First published: