• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • தேவை அதிகம் இருக்கும் நிலையில் குறையும் இந்திய கச்சா எண்ணெய் உற்பத்தி - காரணம் என்ன?

தேவை அதிகம் இருக்கும் நிலையில் குறையும் இந்திய கச்சா எண்ணெய் உற்பத்தி - காரணம் என்ன?

கச்சா எண்ணெய்.

கச்சா எண்ணெய்.

ஈரான் மீதான பொருளாதார தடையை அடுத்து சவுதி, ரஷ்யா நாடுகளிலிருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
    2018-2019 நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 4 சதவீதம் சரிந்துள்ளதாக பெட்ரோலியம் அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.

    மத்திய பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய் கிணறுகள் மிகவும் பழமையானவை என்பதால் அதிலிருந்து கிடைக்கும் எண்ணெய் அளவும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    2018-2019 நிதியாண்டில் இந்தியாவில் 34.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுவே 2017-2019 நிதியாண்டில் 35.7 மில்லியன் டன்னாக இருந்தது.

    2017-2018 நிதியாண்டில் ஓ.என்.ஜி.சி கச்சா எண்ணெய் உற்பத்தி 22.25 மில்லியன் டன்னாக இருந்தது. இதுவே 2018-2019 நிதியாண்டில் 21 மில்லியன் டன்னாகச் சரிந்துள்ளது.

    தனியார் நிறுவனங்கள் 9.8 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்துள்ளன. இது 2017-2018 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் சரிந்துள்ளது.

    கடந்த 7 ஆண்டுகளாகவே இந்தியாவின் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருவதாகத் தரவுகள் கூறுகின்றன.

    கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனின் உற்பத்தி அதிகரித்தும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் உற்பத்தி சரிந்தும் உள்ளது.

    இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை ஒருபக்கம் அதிகரித்து வரும் நிலையில் உற்பத்தி குறைந்து இறக்குமதி அதிகரித்து வருகிறது. தற்போது ஈரான் கச்சா எண்ணெய்க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வரும் காலங்களில் இந்திய கச்சா என்ணெய்க்கு தேவை அதிகமாக இருக்கும்.

    ஈரான் மீதான பொருளாதார தடையை அடுத்து சவுதி, ரஷ்யா நாடுகளிலிருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவும் இந்தியாவிற்கு தேவையான கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: