2018-2019 நிதியாண்டில் காப்பர் ஏற்றுமதி 70% சரிவு - இந்திய தொழில்துறை குழு அறிக்கை

மாதிரிப்படம்

இந்தியாவின் 40 சதவீத காப்பர் உற்பத்தி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் காப்பரின் அளவு 70 சதவீதம் குறைந்துள்ளது என்று இந்திய தொழில்துறை குழு தெரிவித்துள்ளது.

  2017-2018 நிதியாண்டில் 3.48 பில்லியன் டாலர் மதிப்பிலான காப்பர் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது. இதுவே 2018-2019 நிதியாண்டில் 1.07 பில்லியன் டாலராக அது குறைந்துள்ளது.

  இந்தியாவின் 40 சதவீத காப்பர் உற்பத்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து செய்யப்பட்டு வந்தது.

  கடந்த ஒரு வருடமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால், இந்தியாவில் காப்பர் உற்பத்தி சரிந்துள்ளது.

  இதுவே இந்திய காப்பர் ஏற்றுமதி சரிவுக்கு முக்கிய காரணம் என்றும் இந்திய தொழில்துறை குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் பார்க்க:
  Published by:Tamilarasu J
  First published: