ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்தியாவில் கார்கள் வாங்குவதற்கான சராசரி பட்ஜெட் 30 சதவீதம் அதிகரிப்பு..! மாருதி முதலிடம்..!

இந்தியாவில் கார்கள் வாங்குவதற்கான சராசரி பட்ஜெட் 30 சதவீதம் அதிகரிப்பு..! மாருதி முதலிடம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

2022 ஆண்டில் கார் வாங்க விரும்பிய மூன்று வாடிக்கையாளர்களில் ஒருவர் மாருதி காரை தேர்வு செய்து வாங்கியதாக தரவுகள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் துறையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்துள்ளது. முக்கியமாக கொரோனா தொற்றுக்கு முன்பு மிக வேகமாக வளர்ந்து வந்த ஆட்டோமொபைல் துறை கொரோனா தொற்று சமயத்தில் திடீரென மிகப் பெரும் சரிவை சந்தித்தது. இப்போது மீண்டும் தனது பழைய நிலையை அடைந்து முன்னர் இருந்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை அதிவேக வளர்ச்சி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தான் தற்போது கிடைத்துள்ள அறிக்கைகளின் படி கடந்த 2022 ஆம் ஆண்டில் கார் வாங்குவதற்கான சராசரி பட்ஜெட் ஆனது 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இதற்கு முன்பு கார்களை வாங்குவதற்கு மக்கள் முடிவு செய்திருந்தால், அதற்கான சராசரி விலையானது 4.5 லட்சம் என இருந்து வந்தது. பெரும்பாலும் இந்த விலைக்குள் அடங்கும் கார்களை தான் மக்கள் அதிகம் வாங்க விருப்பம் காட்டி வந்தனர். ஆனால் கடந்த ஆண்டில் இந்த மதிப்பானது 6 லட்சம் வரை உயர்ந்துள்ளது. அதாவது முன்னர் இருந்ததை விட கூடுதல் வழியிலான கார்களை வாங்குவதற்கு மக்கள் அதிக விருப்பம் காட்டியுள்ளனர்.

இதைப் பற்றி பேசிய கார்ஸ் 24 நிறுவனத்தின் துணை நிறுவனர் கஜேந்திரா ஜாங்கித் கூறுகையில் 2022 ஆம் ஆண்டு எங்களுக்கு மிகவும் அற்புதமான ஒரு ஆண்டாக அமைந்தது. வாடிக்கையாளர்களுக்கு எங்களது சிறப்பான சேவையை அளிக்க கடுமையாக முயற்சி செய்தோம். முக்கியமாக இந்தியாவில் கார்கள் வாங்க விரும்பும் மக்களிடையே அதன் மைலேஜ் பற்றிய அக்கறை மிக அதிகமாக உள்ளது. கார் வாங்குவதற்காக எங்களை தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதன் மைலேஜ் பற்றியும், அதன் எரிபொருள் பற்றியும் தான் மிக அதிக தகவல்களை கேட்டறிந்தார்கள். அதிலும் மிகவும் முக்கியமாக இந்த கார் எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதுதான் அதிக நபர்களுக்கும் கேள்வி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மிக அதிக அளவிலான கார்கள் பைனான்ஸ் செய்யப்பட்ட இடங்களில் ஹைதராபாத் லக்னோ கொல்கத்தா ஆகியவை முன்னிலையில் இருக்கின்றன. டெல்லியில் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாயை கார் வாங்குவதற்காக ஒரு வாடிக்கையாளர் கடன் வாங்கியுள்ளார். மேலும் கடந்த ஆண்டில் கார்கள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது ஆகியவை மிகப் பெரும் அளவில் விரிவடைந்துள்ளது. கடந்தாண்டில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

2022 ஆண்டில் கார் வாங்க விரும்பிய மூன்று வாடிக்கையாளர்களில் ஒருவர் மாருதி காரை தேர்வு செய்து வாங்கியதாக தரவுகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் தற்போதும் மாருதி நிறுவனம் தான் இந்தியாவில் மிகப் பிரபலமான நம்பகத் தன்மை வாய்ந்த ஒரு நிறுவனமாக முன்னணியில் இருந்து வருகிறது. ஹுண்டாய், ஹோண்டா, ரெனால்ட் மற்றும் ஃபோர்ட் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதைத் தவிர கடந்த ஆண்டில் புதிதாக கார் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் 35 வயதுக்கு குறைவானவர்களே என்பதும் கூடுதல் தகவல்.

First published:

Tags: Automobile