ஹோம் /நியூஸ் /வணிகம் /

இரண்டே நாட்களில் ரூ.25,000 கோடி.. கிலோ கணக்கில் விற்பனையான தங்கம்! தீபாவளி டாப் சேல்!

இரண்டே நாட்களில் ரூ.25,000 கோடி.. கிலோ கணக்கில் விற்பனையான தங்கம்! தீபாவளி டாப் சேல்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நாடு முழுவதும் தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு இரண்டே நாட்களில் 25,000 கோடி ரூபாய்க்கு நகை வியாபாரம் நடந்துள்ளது நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சுமார் 2 வருட மந்தநிலைக்கு பின் தங்கம் மற்றும் நகை விற்பனை இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் கணிசமாக அதிகரித்து உள்ளது. தீபத் திருவிழாவின் போது இந்தியாவில் நகை தொழில் உண்மையிலேயே ஜொலித்தது. தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரு தினங்களில் நாடு முழுவதும் தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

  இந்த 2 நாட்களில் நாட்டில் நகை மற்றும் தங்கம் விற்பனை உச்சத்தை தொட்டுள்ளது. தீபாவளியையொட்டி இந்த 2 நாட்களில் நாடு முழுவதிலும் சுமார் ரூ.25,000 கோடியை நகை துறை ஈட்டியிருக்கிறது. அடுத்த சில மாதங்களில் உலகளாவிய மந்தநிலை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை மிக உயர்ந்த அளவை தொட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக நாடு முழுவதும் தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு இரண்டே நாட்களில் 25,000 கோடி ரூபாய்க்கு நகை வியாபாரம் நடந்துள்ளது நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த 2 நாட்களில் நாட்டின் மொத்த வியாபாரம் ரூ.45,000 கோடியைத் தாண்டி இருக்கிறது.

  தீபாவளியை முன்னிட்டு நடைபெற்றுள்ள இந்த ரூ.45,000 கோடி வர்த்தகத்தில் 25,000 கோடி நகை வியாபாரத்தில் ஈட்டப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள சுமார் ரூ.20,000 கோடி வர்த்தகம் ஆட்டோமொபைல்கள், கணினி மற்றும் கணினி தொடர்பான பொருட்கள், ஃபர்னிச்சர்கள், வீடு மற்றும் அலுவலக அலங்காரத்திற்கு தேவையான பொருட்கள், இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள், சமையலறை பொருட்கள், அனைத்து வகையான பாத்திரங்கள், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் பொருட்கள் உள்ளிட்டவற்றின் பங்கு இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

  Read More : தீபாவளிக்கு இத்தனை ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனையா? பாத்தா ஷாக் ஆயிடுவீங்க!

  பண்டிகைகால விற்பனை தொடர்பாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் (சிஏஐடி) தேசியத் தலைவர் கூறுகையில், 2 நாட்கள் நடந்த தந்தேராஸ் திருவிழாவில் நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், நோட்டுகள், சிற்பங்கள், பாத்திரங்கள் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் என பெருமளவில் விற்பனையாகி நகைத்துறையில் மட்டுமே சுமார் ரூ.25,000 கோடி என்ற அளவில் வர்த்தகம் நடைப்பெற்றுள்ளது. இந்த வணிக எழுச்சிக்கு முக்கிய காரணம் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய அளவிலான தொற்று தாக்கம் ஏதுமின்றி இயல்பாக கொண்டாடப்படும் தீபாவளியாக நடப்பாண்டு மாறியது .

  நகைகள் மட்டுமின்றி, ஆட்டோமொபைல் துறையும் இந்த பண்டிகை காலத்தால் எழுச்சி பெற்றுள்ளது. அதிக அளவு தங்கம் விற்பனையாகி இருப்பது அதன் மீதான மக்களின் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 80% வரை அதிகரித்துள்ளது. இவற்றை பார்க்கும் போது தொற்றுநோய் பாதிப்பில் இருந்து தங்க தொழில்துறை தற்போது முழுமையாக மீண்டுள்ளது என்றார்.

  கோவிட் தொற்று காரணமாக சுமார் 2 ஆண்டுகளாக நீடித்த மந்தநிலை மாறி வழக்கம் போல இயல்பாக ஆகி இருக்கும் வர்த்தகம் அணைத்து பிரிவு வணிகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது என CAIT பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறி இருக்கிறார். சென்கோ கோல்டு & டயமண்ட்ஸின் எம்.டி & சி.இ.ஓ., சுவாங்கர் சென் கூறுகையில், குறிப்பாக செயின்கள் மற்றும் மோதிரங்கள் வடிவில் ஆண்களின் நகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. அதே போல வரவிருக்கும் திருமண சீசனுக்காக மணப்பெண்களும் தங்களுக்கு தேவையான நகைகளை வாங்க தொடங்கியுள்ளனர் என்றார்.

  ஆல் இந்தியா ஜூவல்லர்ஸ் அண்ட் கோல்ட்ஸ்மித் பெடரேஷனின் தேசியத் தலைவர் பங்கஜ் அரோரா கூறுகையில் இந்தியாவில் தங்கத்தின் தேவை உச்சத்தை எட்டியுள்ளதால், கோவிட் நெருக்கடியில் இருந்து இந்திய தங்கத் தொழில் முழுமையாக மீண்டுள்ளது என்றார். இதற்கிடையே நடப்பாண்டு இந்திய வாடிக்கையாளர்கள் இந்திய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வாங்க ஆர்வம் காட்டுவதால் சீனாவுக்கு நடப்பாண்டில் இதுவரை ரூ.75,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Business, Deepavali, Gold