ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்த 10 நாடுகளில் உள்ள இந்தியர்களும் விரைவில் UPI மூலம் பணம் செலுத்தலாம்!

இந்த 10 நாடுகளில் உள்ள இந்தியர்களும் விரைவில் UPI மூலம் பணம் செலுத்தலாம்!

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) , இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI)  வழிகாட்டுதல்களை தங்கள் வங்கிகளில் கொண்டு வர ஏப்ரல் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) , இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களை தங்கள் வங்கிகளில் கொண்டு வர ஏப்ரல் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) , இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களை தங்கள் வங்கிகளில் கொண்டு வர ஏப்ரல் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இன்று நம் அனைவர் கைகளிலும் பணம் நோட்டாக இருப்பதில்லை UPI பேமெண்ட் ஆப்களாகத் தான் இருக்கின்றன. 5 ரூபாய் முதல் 50000 வரை எவ்வளவு தொகை ஆனாலும் UPI தான் கைகொடுக்கும். வெறும் ஆறு ஆண்டுகளில் UPI பரிவர்த்தனைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இது தற்போது இந்தியாவிற்குள் வாழும் இந்திய எண் கொண்டவர்களுக்கு  மட்டும் செயல்பட்டு வருகிறது. அதை விரிவுபடுத்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் இதை எளிதாக பயன்படுத்த வழி செய்கின்றனர்.

இதுவரை மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்திய எண்ணை வைத்து UPI பயன்படுத்தி வந்தனர். அதை மாற்றி விரைவில் தங்கள் சர்வதேச மொபைல் எண்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (UPI) அணுக அனுமதி அளிக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளனர்.

இது செயல்பாட்டிற்கு வந்தால் சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய 10 நாடுகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) அவர்களின் இந்திய ஃபோன் எண்ணைச் சார்ந்திருக்காமல் தாங்கள் வைத்திருக்கும் சர்வதேச எண்ணை வைத்தே பரிவர்த்தனைகளுக்கான UPI சேவைகளை அணுகலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு NRE மற்றும் NRO என இரண்டு வகையான கணக்குகள் இருக்கும். NRE கணக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வெளிநாட்டு வருமானத்தை இந்தியாவிற்கு மாற்ற உதவுகிறது, அதே நேரத்தில் NRO கணக்கு இந்தியாவில் சம்பாதித்த வருமானத்தை நிர்வகிக்க உதவுகிறது.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, சர்வதேச மொபைல் எண்களைக் கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்களின் NRE/NRO (Non Resident External and Non Residence Ordinary) போன்ற கணக்குகள் தங்கள் சர்வதேச தொலைபேசி எண்கொண்டே  இனி UPIஐப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யலாம்.

இதற்காக பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் கூட்டாளர் வங்கிகள் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) , இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல் போன்றவற்றை  பின்பற்றி, பணமோசடி அல்லது பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதில் இருந்து பாதுகாக்கும் செயல்களை உறுதிசெய்ய வலியுறுத்தியுள்ளது. வழிகாட்டுதல்களை தங்கள் வங்கிகளில் கொண்டு வர ஏப்ரல் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு நேற்று ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்கான ₹2,600 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ரூபே மற்றும் UPI ஆகியவற்றைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு நிதிச் சலுகைகள் வழங்கப்படும். அதேபோல பெரிய UPI நடவடிக்கை சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் வணிகங்களுக்கு உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Online Transaction, Payment App, RBI, Tamil News, UPI