அமெரிக்காவில் க்ரீன் கார்டு பெற 10 வருடங்கள் காத்திருக்கும் இந்தியர்கள்!

2018 ஏப்ரல் வரையில் 3,06,601 இந்தியர்கள் க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

news18
Updated: January 12, 2019, 9:32 PM IST
அமெரிக்காவில் க்ரீன் கார்டு பெற 10 வருடங்கள் காத்திருக்கும் இந்தியர்கள்!
மாதிரிப் படம்
news18
Updated: January 12, 2019, 9:32 PM IST
அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடிபெயர விரும்பும் வெளிநாட்டவர்கள் க்ரீன் கார்டு பெற எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியுள்ளது என்பது தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் க்ரீன் கார்டு பெற விண்ணப்பித்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்தும், அதற்கு தேவைப்படும் காலம் குறித்தும் அமெரிக்க காங்கிரஸ் ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் க்ரீன் கார்டு பெற நீண்ட காலம் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ரீன் கார்டு பெற வெளிநாட்டவர்கள் எவ்வளவு காலம் காத்திருக்கின்றனர்?

சீனர்கள் - 11 வருடம், 1 மாதங்கள்
இந்தியர்கள் - 9 வருடம், 10 மாதங்கள்
வியாட்நாம் - 2 வருடம், 8 மாதங்கள்
மெக்சிகோ - 2 வருடம்
Loading...
பிற நாடுகள் - 1 வருடம், 6 மாதங்கள்

அதிக க்ரீன் கார்டு பெற்றதில் இந்தியர்கள் முன்னிலை

அமெரிக்காவில் க்ரீன் கார்டுக்கு விண்ணப்பித்ததில் இந்தியர்கள் அதிகபட்சமாக 28.6 சதவீத அனுமதியைப் பெற்றுள்ளனர். இந்தியாவைத் தொடர்ந்து சீனா, மெக்ஸிகோ, வியாட்நாம், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் முறையே 7.1 சதவீத அனுமதியைப் பெற்றுள்ளனர்.

2018 ஏப்ரல் வரையில் 3,06,601 இந்தியர்கள் க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில் 78 சதவீதத்தினர் வேலை சார்ந்த க்ரீன் கார்டு விண்ணப்பதாரர்களாக உள்ளனர் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மணல் கொள்ளைக்கு பின்னால் உள்ள அரசியல் புள்ளிகள்...
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...