Home /News /business /

வெளிநாடுகளில் இந்தியாவின் பிராண்ட் இமேஜை உயர்த்தும் இந்தியர்கள் - இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் புதிய கோணம்

வெளிநாடுகளில் இந்தியாவின் பிராண்ட் இமேஜை உயர்த்தும் இந்தியர்கள் - இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் புதிய கோணம்

Infosys

Infosys

இந்தியர் ஒருவர் புகழ்பெற்ற நிறுவனத்தின் உயர்ந்த பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதை பலரும் வரவேற்று இதனை வெற்றியாக கொண்டாடி வரும் நிலையில் ஒரு சாரார் இதற்கு வேதனையும் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் சிறந்து விளங்கும் இந்தியர்கள், இந்தியாவின் பிராண்ட் இமேஜை உயர்த்துகிறார்கள், அவர்கள் பாராட்டப்பட வேண்டும் என இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உலகின் புகழ்பெற்ற சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி அண்மையில் தனது பதவியில் இருந்து விலகிய நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பராக் அக்ரவால் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் மைக்ரோசாஃப்ட், கூகுள், ஐபிஎம், அடோப், விஎம்வேர் போன்ற உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்த இந்தியர்களின் பட்டியலில் பராக் அக்ரவாலும் இணைந்தார்.

இந்தியர் ஒருவர் புகழ்பெற்ற நிறுவனத்தின் உயர்ந்த பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதை பலரும் வரவேற்று இதனை வெற்றியாக கொண்டாடி வரும் நிலையில் ஒரு சாரார் இதற்கு வேதனையும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கல்வி பயின்று திறமைசாலிகளாக விளங்குபவர்கள் இந்தியாவில் பணியாற்றி இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக பணியாற்ற இந்தியாவை கை கழுவிச் செல்வதாக வேதனையை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

Also read:  ட்விட்டர் சிஇஓ பதவியில் இந்தியர் - யார் இந்த பராக் அக்ரவால்?

CRED நிறுவனத்தின் தலைவர் குணால் ஷா கடந்த நவம்பர் 30ஆம் தேதி, வெளியிட்டிருந்த ட்வீட்டில், “இந்தியர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்புக்கு வருவதை சக இந்தியர்கள் கொண்டாடும் அதே நேரத்தில், நம் திறமைசாலிகள் நாட்டைவிட்டு வெளியேற என்ன காரணம் என்பதையும் சிந்திக்க வேண்டும், இந்த நிலை மாற வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டும் எனவும் யோசிக்க வேண்டும். சிறந்த திறமைசாலிகள் நாட்டைவிட்டு வெளியேறுவதால் அந்த நாடு பெரியளவில் வெற்றிபெறாது.” இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ரேசர்பே நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷில் மாத்தூரும் இந்த கருத்தில் உடன்பட்டிருந்தார். வெளிநாட்டு நிறுவனங்கள் ஐஐடி கல்வி நிறுவனங்களில் படித்து முடித்தவர்களை பெரும் சம்பளம் கொடுத்து தங்கள் நாடுகளுக்கு இழுத்துச் செல்கின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு இந்திய திறமைசாலிகள் பெருமளவில் செல்கின்றனர். இவர்கள் திரும்பி வருவது கேள்விக்குறியே. இந்த நிலை மாற வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

Also read:   அமேசானில் கஞ்சா விற்பனை வழக்கை விசாரித்த எஸ்.பி மாற்றம்: அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கண்டனம்

இந்திய நிறுவனங்களின் தலைவர்கள் இதுபோல பேசிவரும் நேரத்தில் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தி வேறு கோணத்தில் இதனை அணுகியுள்ளார். மணிகண்ட்ரோல் தளத்துக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், “நம்மிடம் பெரிய அளவில் மனிதவளம் இருக்கிறது. நம் இளைஞர்கள் அசாதாரண விஷயங்களை செய்திருக்கின்றனர். அவர்கள் உருவாக்கியிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பாருங்கள்.

எனவே சில இந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்று அங்கு சாதித்து வருவது பெரிய அளவில் பிரச்னையாக எனக்கு தோன்றவில்லை. அவர்கள் இந்தியாவுக்கு நன்மையே செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் பிராண்டை அவர்கள் வெளிநாடுகளில் நிறுவிவருகிறார்கள். மிகச்சிறிய எண்ணிக்கையிலான அவர்கள் இந்தியாவின் பிரதிநிதிகள், அவர்கள் மேலும் சாதிக்க வேண்டும். இந்தியாவுக்கு அவர்கள் திரும்ப வேண்டும் என கூறமாட்டேன், அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
Published by:Arun
First published:

Tags: Business, Infosys, Twitter

அடுத்த செய்தி