Home /News /business /

அமெரிக்காவில் 103 பில்லியன் டாலர்களை ஈட்டும் இந்திய தொழில்நுட்பத் துறை.!

அமெரிக்காவில் 103 பில்லியன் டாலர்களை ஈட்டும் இந்திய தொழில்நுட்பத் துறை.!

மாதிரி படம்

மாதிரி படம்

Indian Tech Industry | இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரையிலான முதல் காலாண்டில் 14,136 பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.

இந்திய தொழில்நுட்பத் துறை 103 பில்லியன் வருவாயை ஈட்டி இருக்கிறது. அமெரிக்காவில் 2,07,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு அளித்து வருவதோடு, அவர்களுக்கான சராசரி ஊதியமாக 1,06,360 டாலர் நிர்ணயித்திருப்பதும் தெரிய வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டை விட நடப்பு ஆண்டில் ஐடி வேலைவாய்ப்புகள் 22 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அறிக்கை ஒன்று கூறுகிறது.

"மதிப்புச் சங்கிலி(value chain) முதல் இறுதி வாடிக்கையாளர்கள் வரை(end customers) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்கத் திறமை மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கின்றன, அவை தொழில்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான அதிநவீன கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் மற்றும் உற்பத்தி செய்வதில் தங்கள் உலகளாவிய வளங்களை மேம்படுத்துகின்றன" என்று நாஸ்காம் மற்றும் IHS Markit அறிக்கை கூறுகிறது.

புவியியல் ரீதியாக மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா இன்று மிகப்பெரிய தேவை-விநியோக இடைவெளிகளைக் கொண்டுள்ளது. ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்களுடன் இந்திய தொழில்நுட்பத் துறை செயல்படுவதாகவும், அவற்றுள் பெரும்பாலானவை அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவதாகவும் நாஸ்காமின் தலைவர் தேப்ஜானி கோஷ் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் யுகத்தின் முக்கியமான சவால்களைப் புரிந்துகொள்வதற்கும்,சவால்களை சந்திப்பதற்கும் இந்திய தொழில்நுட்பத் துறை நன்கு தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.

"உள்ளூர் முதலீடுகள்,மற்றும் தொழிலாளர் திறன் மற்றும் உள்ளூர் பணியாளர்களின் முயற்சிஆகியவற்றின் மூலம் இந்திய தொழில்நுட்பத் துறை அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு தேவையான பங்களிப்பை அளிக்கிறது" என்று கோஷ் கூறினார்.



இந்திய தொழில்நுட்பத் துறையினால், அமெரிக்க பொருளாதாரம் இன்றுவரை மொத்தம் 396 பில்லியன் டாலர் லாபத்தை ஈட்டியுள்ளது, மேலும், 1.6 மில்லியன் வேலை வாய்ப்புகள் மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் 198 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை ஈட்டுவதற்கு இந்திய தொழில்நுட்பத் துறை காரணமாக அமைந்துள்ளத்தாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. மேலும் நடப்பு ஆண்டின் பொருளாதாரம் 2020ம் ஆண்டு அமெரிக்க மாநிலங்களின் பொருளாதாரத்தை விட அதிகம் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Also Read : ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறது – தென்கொரிய அம்பாசடரின் அறிக்கை.!

அமெரிக்காவிலுள்ள இந்திய தொழில்நுட்பத் துறையின் கணிசமான முதலீடுகள் அமெரிக்க வேலைவாய்ப்பு தளத்தை வளர்ப்பதிலும்,அடுத்த தலைமுறை திறமைகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது..
அமெரிக்காவில் STEM பைப்லைனை(STEM pipeline) வலுப்படுத்தும் வகையில் கிட்டத்தட்ட 180 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், சமூகக் கல்லூரிகளுடன் இணைந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் 1.1 பில்லியன் டாலருக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளன. இப்படியான முயற்சிகளால் 2.9 மில்லியன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்றுவரை பயன் பெற்றுள்ளனர். மேலும், 2,55,000 க்கும் மேற்பட்ட தற்போதைய பணியாளர்கள் திறமை பெற்றுள்ளனர்.

Also Read : உங்கள் முதலீடுகள் மீது பாதுகாப்பான, நிலையான வருமானம் வேண்டுமா.? இந்த திட்டங்களை பரிசீலிக்கலாம்..

அமெரிக்காவில் STEM தொழில்களுக்கான தேவை அடுத்த ஆண்டில் STEM அல்லாத தொழில்களை விட 1.5 மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை கூறியது. இதன் அடிப்படையில் சுமார் 70 சதவீத வளர்ச்சி IT துறைகளால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் 2030 ஆம் ஆண்டுகளில் STEM வளர்ச்சி 51 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிகிறது.



இந்தியாவில், HCL டெக்னாலஜிஸ் என்ற மென்பொருள் நிறுவனம்,இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் மொத்தம் 6,089 ஆட்களை பணியமர்த்தியுள்ளது, உலக அளவில் மொத்தம் 2,10,966 பணியாளர்கள் உள்ள நிலையில். 2022-2023 ஆம் பொருளாதார ஆண்டுடைய முதல் காலாண்டின் முடிவில் இந்நிறுவனத்தின் attrition level 23.8 சதவீதமாக உள்ளது.

Also Read : சீன உதிரிபாக தயாரிப்பாளர்களுக்கு அனுமதி கோரும் இந்திய நிறுவனங்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரையிலான முதல் காலாண்டில் 14,136 பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. ஜூன் 31, 2022 இல் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 6,06,331 ஆக இருந்தது.

ஜூன் 2022 காலாண்டில் தகவல் தொழில்நுட்ப (IT) சேவைகளில் அதன் attrition rate (நிறுவனத்தை விட்டுச் சென்றவர்களுக்கும், சராசரி பணியாளர்களுக்குமான விகிதம்)19.7 சதவீதமாக இருந்தது, இது முந்தைய காலாண்டில் 17.4 சதவீதமாக இருந்தது என்றும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: America, India, IT Industry

அடுத்த செய்தி