ஹோம் /நியூஸ் /வணிகம் /

கோதுமையை அடுத்து நிராகரிக்கப்படும் இந்தியத் தேயிலை!

கோதுமையை அடுத்து நிராகரிக்கப்படும் இந்தியத் தேயிலை!

நிராகரிக்கப்படும் இந்தியத் தேயிலை

நிராகரிக்கப்படும் இந்தியத் தேயிலை

Indian tea was rejected by Taiwan, Iran: 2017-18 ஆண்டில் இந்திய தேயிலை வர்த்தகம் $785 மில்லியனாக இருந்தது. 2021 வர்த்தக ஆண்டில் அது $700 மில்லியன் ஆகா குறைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வரம்புகளுக்கு மேல் பூச்சிக்கொல்லிகள் இருப்பதால் தைவானும் ஈரானும் இந்திய தேயிலையின் மூன்று கொள்கலன்களை நிராகரித்து விட்டது. இந்திய கோதுமையில் நிராகரிக்கப்பட்ட நிலையில் இப்போது தேயிலை அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தைவான், தேயிலை இறக்குமதியில்  முக்கிய நாடு ஆகும். அந்நாட்டின் தேயிலை இறக்குமதியில் பெரும்பாலானவை வியட்நாம், இலங்கை மற்றும் சீனாவில் இருந்து வருகின்றன. வியட்நாம் பெரும்பாலும் க்ரீன் டீ  அல்லது கருப்பு தேயிலையை  இறக்குமதி செய்கிறது. இலங்கை பெரும்பாலும் கருப்பு தேயிலையை தைவானுக்கு ஏற்றுமதி செய்கிறது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார  நிலையால் தேயிலை ஏற்றுமதி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு அடுத்து படியாக தேயிலை ஏற்றுமதி நாடான இந்தியாவிற்கு தைவான் சந்தையில் நுழையும் நல்ல வாய்ப்பு கடந்த சில ஆண்டுகளாக கிடைத்துள்ளது.

உலக அளவில் தேயிலை ஏற்றுமதி செய்யும் நான்காவது பெரிய நாடு இந்தியா. தேயிலையில் பூச்சி புழுக்கள் வராமல் இருக்க Quinalphos எனும் ரசாயனம் உபயோகிக்கப்படும். உலக சந்தையில் ஐரோப்பிய ஐக்கியம் உலர்ந்த தேயிலை ஒரு கிலோவிற்கு Quinalphos 0.7 மில்லிகிராம் வரையிலும், ஜப்பான் 0.1 மிகி வரையும் அனுமதிக்கிறது. ஆனால் இந்திய தேயிலை அமைப்பு கிலோவிற்கு  0.01மில்லிகிராம் என்பதையே தரமாக நிர்ணயித்துள்ளது.

இந்திய தேயிலை  தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் 0.1 என்ற தரத்தில் உற்பத்தி செய்தால் கூட உலக சந்தையை கைப்பற்றி விடலாம் என்ற நிலையில் உள்ளது. ஆனால் கடந்த சில மாதத்திற்கு முன் தைவானுக்கு அனுப்பப்பட்ட 600 கொள்கலனில் 2 கலனில் இருந்த தேயிலை, தைவான் தர நிர்ணயத்தை விட அதிக Quinalphos கொண்டிருந்த  காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் கொல்காத்தாவைச் சார்ந்த நிறுவனத் தயாரிப்பு என்று சொல்லப்படுகிறது. இதே Quinalphos அதிக அளவுகளால் தான் வியட்நாம், சீன தேயிலைகள் தைவான் சந்தையில் பெரும் அடி வாங்குகிறது.

7 மாதம் இல்லாத அளவு அதிகரித்த சமையல் எண்ணெய் இறக்குமதி.. காரணம் என்ன?

மத்திய ஆசிய நாடுகளில் டீ பிரியர்கள் அதிகம் என்றே சொல்லலாம். ஈரான் அதன் சந்தையை இலங்கை, இந்தியாவிற்கு விட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரக் காரணம் இந்தியாவிற்கு பெரிதும் சாதகமாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் கிலோ தேயிலை இந்தியாவில் இருந்து ஈரானுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அதில் 1 கொள்கலன்  திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.  பைட்டோசானிட்டரி பிரச்சினைகளால் திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.சுகாதார தரத்தில் அந்த தேயிலையில் தோல்வியடைந்து விட்டதாகத் தெரிகிறது.

2017-18 ஆண்டில் இந்திய தேயிலை வர்த்தகம் $785 மில்லியனாக இருந்தது. 2021 வர்த்தக ஆண்டில் அது $700 மில்லியன் ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் இப்படி இந்திய பொருள்கள் நிராகரிக்கப்பட்டால், உலக சந்தையில் இந்தியாவின் நிலை பெரிதும் பாதிக்கப்படும்.

First published:

Tags: Iran, Taiwan, Tea, Wheat