புதிய உச்சம் தொட்டன பங்குச் சந்தைகள்...!

முதலீடுகள் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6 வர்த்தக நாட்களாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டு மொத்த மதிப்பு 203 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

முதலீடுகள் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6 வர்த்தக நாட்களாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டு மொத்த மதிப்பு 203 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இம்மாதம் ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    பங்குச்சந்தைகள், தொடர்ந்து 6-வது வர்த்தக நாளாக, திங்கட்கிழமையும் புதிய உச்சம் தொட்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், வர்த்தகத்தின்போது, 51,523 புள்ளிகள் என்ற உச்சத்தை தொட்டது. வர்த்தக நேர முடிவில், 617 புள்ளிகள் உயர்ந்து 51,349 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது. எம் அண்ட் எம், பஜாஜ் பின்சர்வ், இன்போசிஸ், ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகள் நல்ல உயர்வை சந்தித்தன.

    இதேபோல, தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிப்டி, 15,160 என்ற புதிய உச்சத்தை பெற்றது. வர்த்தக நேர முடிவில் 191.5 புள்ளிகள் உயர்ந்து 15,116 புள்ளிகளாக இருந்தது. 40 நிறுவனங்களின் பங்குகள் உயர்வைப் பெற்றன.

    மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பு, 203 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை பெற்றது.

    மேலும் படிக்க...ரூ.36,000-க்கு கீழ் சென்ற தங்கம் விலை..

    இதனிடையே, சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 35,720 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 4 ரூபாய் குறைந்து 4,465 ரூபாயாக இருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    பார் வெள்ளி விலை கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து 73,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 1-ம் தேதியில் இருந்து ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்துள்ளது. எனினும், வரும் நாட்களில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: