இன்று சரிவுடன் தொடங்கியது இந்திய பங்குச்சந்தைகள்!

இந்நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. காலை வரத்தக நேரப்படி மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் சரிந்து 38,826 புள்ளிகளில் வர்த்தகமானது.

இன்று சரிவுடன் தொடங்கியது இந்திய பங்குச்சந்தைகள்!
மாதிரி படம்
  • News18
  • Last Updated: September 25, 2019, 12:17 PM IST
  • Share this:
இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் பெருநிறுவனங்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் 2,000 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது.

இதனால், பங்குச்சந்தைகள் 10,00,000 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்தது. இந்த சந்தர்ப்பத்தை முதலீட்டாளர்கள் சாதகமாக்கி லாபம் நோக்கத்துடன் பங்குகள் விற்பனை செய்ததை அடுத்து நேற்று நடைபெற்ற வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. காலை வரத்தக நேரப்படி மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் சரிந்து 38,826 புள்ளிகளில் வர்த்தகமானது.

நிஃப்டி 81 புள்ளிகள் குறைந்து 11,507 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது.  இதனால் எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, கோட்டாக் மகேந்திரா வங்கி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கிகளின் பங்குகளும் 2.64 விழுக்காடு வரை சரிவை சந்தித்தன.

Also see...
First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்