இரண்டாவது நாளாக உயர்வில் பங்குச்சந்தைகள்!

இரண்டாவது நாளாக உயர்வில் பங்குச்சந்தைகள்!
மும்பையிலுள்ள பங்குச் சந்தை அலுவலகம்
  • Share this:
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று இரண்டாவது நாளாக உயர்வுடன் வணிகத்தை மேற்கொள்கின்றன.

இன்றைய வணிகம் தொடங்கிய சில நிமடங்களிலேயே பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது.

தேசியப்பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் உயர்வு பிரதிபலித்தது. 360 புள்ளிகளுக்கும் அதிகமாக ஏற்றம் கண்டு வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


11 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகர்கள் லாபம் ஈட்டியிருந்தனர். இந்நிலையில் இன்றும் பங்கு வணிகம் ஆர்வமாக நடைபெற்று வருவதால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Also see...
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்