அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக புதிய சரிவை கண்டு ரூபாய் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. செவ்வாய் கிழமை, 46 காசுகள் குறைந்து 78.83 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை, ஒரே நாளில் ஒரு சதவிகிதம் அதிகரித்தது ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.இந்தியா தனது எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இறக்குமதி செய்கிறது. அதிகரித்த இறக்குமதி பணவீக்கம் ரூபாயின் மதிப்பை குறைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மோசமான நிலையை எட்டும் என அவர்கள் தெரிக்கின்றனர்.
லிபியா மற்றும் ஈக்வடாரில் அரசியல் அமைதியின்மை காரணமாக விநியோக சங்கிலி தடைபட்டு எண்ணெய் விலை மூன்றாவது நாளாக உயர்ந்தது. முக்கிய ஏற்றுமதியாளர்களான சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை உற்பத்தியை அதிகரிக்க தயக்கம் காட்டி வருகின்றன.உள்நாட்டு சந்தைகளில் ஏற்படும் வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான டாலர் விற்பனை காரணமாக ரூபாயின் மதிப்பு மேலும் சரிய கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
Also Read: முகேஷ் அம்பானி ஜியோ இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா-ஆகாஷ் அம்பானி தலைவராக நியமனம்
ரூபாய் மதிப்பின் தொடர் சரிவு, இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பிலும் எதிரொலித்து வருகிறது. ஜூன் 17 -ம் தேதி முடிந்த வாரத்தில் அந்நிய செலவாணி கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து, 591 பில்லியன் டாலர்களாக உள்ளது.ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி குறைந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இது, இறக்குமதி பொருட்களின் மீதான வரியை உயர்த்தும் நடவடிக்கையை நோக்கி அரசை தள்ளும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Export and Import Tax, Import tax, Indian Rupee, Rupee