முகப்பு /செய்தி /வணிகம் / இனி பண்டிகை காலங்களில் தாமதமின்றி IRCTCல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் - எப்படி தெரியுமா.?

இனி பண்டிகை காலங்களில் தாமதமின்றி IRCTCல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் - எப்படி தெரியுமா.?

ஐஆர்சிடிசி

ஐஆர்சிடிசி

IRCTC Ticket Booking | தீபாவளி, பொங்கல் போன்ற பல பண்டிகைக் காலங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளத்தை விரைவில் சரிசெய்யவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பட்ட மக்களின் போக்குவரத்து தேவைகளை குறைவானக் கட்டணத்தில் நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்திய ரயில்வே துறை. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற ரயில்வே நிர்வாகமும் பல வசதிகளைப் பயணிகளுக்கு ஏற்படுத்தித் தருகிறது. குறிப்பாக ரயில் நிலையங்களில் பல மணி நேரம் காத்திருந்து நம்முடைய பயணித்திற்கான டிக்கெட்டுகளை புக் செய்வதற்குப் பதிலாக ரயில்வே நிர்வாகம் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலமாக பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்தியது.

இதோடு மட்டுமின்றி ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்தது. குறிப்பாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆதார் இணைக்கப்படாத பயனர் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளையும், ஆதார் இணைக்கப்பட்ட பயனர் தன்னுடைய கணக்கு மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 24 ஆகவும் அதிகரித்துள்ளது. இது பயணிகளுக்கு மிகுந்த பயனளிப்பதாக உள்ளது.

இப்படி பயணத்திற்கான டிக்கெட்டுகளை எளிய முறையில் வீட்டில் இருந்தே பெற்று வந்தாலும் சில சமயங்களில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒவர் அப்லோடு காரணமாக பண்டிகைக் காலங்களில் சர்வர் மெதுவாக செயல்படும். சில நேரங்களில் ஐஆர்சிடிசி இணையதளம் எவ்வித செயல்பாடும் இன்றி காணப்படும். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். இதோடு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது போன்று பல புகார்கள் பயணிகளின் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டதால், ஐஆர்சிடிசி சர்வரில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வதற்கானப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்து.

இதற்காக உலகின் முன்னணி ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான Grant Thornton மூலம் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் எவ்வித பிரச்சனையும் இனி வராமல் சர்வரை சரிசெய்யும்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த Grant Thornton நிறுவனம் இணையதளத்தின் செயல்திறனைக் கண்காணிக்கவும் பயனரின் வசதியை மேம்படுத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் செய்கிறது. இதன் மூலம் பண்டிகை நாள்கள் மட்டுமின்றி சாதாரண நாள்களில் கூட ரயில் நிலையங்களில் மணிக்கணக்கில் நிற்காமல் வெறும் 5 நிமிடங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடலாம்.

Also Read : 'கூகுள் பே' போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டம்.?

சமீப காலங்களாக ஸ்மாட்போன்கள் மற்றும் ஆன்லைன் பயன்பாடு மக்களிடம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக, இ-டிக்கெட்டிங்கின் கீழ் மொத்த முன்பதிவு டிக்கெட்டுகளின் பங்கு 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதோடு மட்டுமின்றி IRCTC யில் 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்த பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2016-17 ஆம் ஆண்டில், ரயில்வே இ-டிக்கெட்டின் பங்கு சுமார் 60 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது ஆன்லைன் பதிவு டிக்கெட்டுகளின் 80.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Also Read : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இனி கவலையில்லை.. விரைவில் வருகிறது பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்.! 

இதுப்போன்று பல்வேறு வசிகளை ரயில்வே நிர்வாகம் அப்டேட் செய்து வருவதால், பண்டிகைக் காலங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஏற்படும் தாமதத்தை நிச்சயம் தவிர்க்க முடியும்.

First published:

Tags: Indian Railways, IRCTC, Train Ticket Reservation