Home /News /business /

வட்டியை உயர்த்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.. இனி லாபம் அதிகமா கிடைக்கும்!

வட்டியை உயர்த்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.. இனி லாபம் அதிகமா கிடைக்கும்!

ஐஓபி

ஐஓபி

1 வருடத்தில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை 5.45% முதல் 5.60% வரை அதிகரித்துள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ 2 கோடிக்கு குறைவான பிக்சட் டெபாசிட்  வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. புதிய விகிதங்கள் செப்டம்பர் (13, 2022)  இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று வங்கி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறியுள்ளது. திருத்தத்தைத் தொடர்ந்து, வங்கி அனைத்து தவணைக்காலங்களிலும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.  7 நாட்கள் முதல் 3 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 3.25% முதல் 5.85% வரை வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    7-29 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) 3% லிருந்து 3.25% ஆக வங்கி உயர்த்தியதுள்ளது. அதே நேரத்தில் 30-45 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை 3.00% லிருந்து 3.35% ஆக உயர்த்தியதுள்ளது. 46 முதல் 90 நாட்கள் முதிர்வு கொண்ட நிலையான வைப்புகளுக்கு இப்போது 3.75% வட்டி கிடைக்கும், அதே சமயம் 91 முதல் 179 நாட்கள் முதிர்வு உள்ளவர்கள் இப்போது 4.10% என்ற விகிதத்தில் வட்டியைப் பெறுவார்கள், 180 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இப்போது 4.65% வட்டி விகிதத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது இது முன்பு 4.50% ஆக இருந்தது.

    ஈஸியா கிடைத்தாலும் பர்சனல் லோனுக்கு எங்கு YES/NO சொல்ல வேண்டும் தெரியுமா?

    1 வருடத்தில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை 5.45% முதல் 5.60% வரை அதிகரித்துள்ளது. 444 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 5.60% லிருந்து 5.65% ஆக உயர்த்தி இருக்கிறது.

    வங்கியால் 1000 நாட்கள் என அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிகபட்சமாக 6% வட்டி விகிதம் அதே சமயம் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவாக (1000 நாட்கள் தவிர) முதிர்ச்சியடையும் திட்டங்களுக்கு இப்போது பெறப்படும் வட்டி விகிதம் 5.60%, இது முன்பு 5.45% ஆக இருந்தது.

    கோடிகளில் வருமானம்.. உங்களுக்காகவே போஸ்ட் ஆபீஸ் தரும் மிகச் சிறந்த வாய்ப்பு!

    இந்தியன் வங்கி 610 நாட்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.அதே போல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது இணையதளத்தில், “மூத்த குடிமக்களுக்கு 0.50% கூடுதல் விகிதம் மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) 0.75% கூடுதல் விகிதம் தொடரும் என தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Fixed Deposit, Savings

    அடுத்த செய்தி