ஐ.நா பதவியில் இந்திய வம்சாவளிப் பெண் - யார் இந்த ப்ரீத்தி சின்ஹா?

ஐ.நா பதவியில் இந்திய வம்சாவளிப் பெண் - யார் இந்த ப்ரீத்தி சின்ஹா?

பிரீத்தி சின்ஹா

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐ.நா மூலதன நிதி மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ப்ரீத்தி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

1966ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு ஐ.நா மூலதன நிதி மேம்பாட்டு ஆணையம் (UNCDF) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் பெண்கள், இளைஞர்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான நிதயுதவி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இதன் நிர்வாக செயலாளராக இருந்த ஜூடித் கார்லு ஓய்வு பெற்றதையடுத்து, நிதித்துறையில் சர்வதேச அளவில் மிகவும் அனுபவம் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் முதலீடு மற்றும் நிதி மேம்பாட்டுத் துறையில் 30 ஆண்டுகாலம் அனுபவம் பெற்றவர் ஆவார். இதற்கு முன் இவர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள எல்.எல்.பி. என்ற சிறப்பு மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், டெல்லியில் உள்ள சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான தனியார்துறை சிந்தனை குழுவான யெஸ் குளோபல் இன்ஸ்டியூட்டின் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், யூ.என்.சி.டி.எப் - ன் தலைவராக திங்கட்கிழமை ப்ரீத்தி சின்ஹா பதவியேற்றுக்கொண்டார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், உலகளவில் பின்தங்கிய நாடுகளில் இருக்கும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோரின் நீடித்த வளர்ச்சியை உருவாக்கும் நோக்கில் தனது பணி இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பாரம்பரியமாக ஒடுக்கப்பட்டு இருக்கும் சமூகங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவது முக்கிய குறிக்கோள் எனவும் ப்ரீத்தி சின்ஹா கூறியுள்ளார். பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புகளுடன் யூ.என்.சி.டி.எப்-கான நிதியை திரட்டி, அதன்மூலம் சந்தை மூலோபாயத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ப்ரீத்தி சின்ஹா நியமனம் குறித்து பேசிய ஐ.நாவின் யூ.என்.டி.பி (UNDP) அதிகாரி அச்சிம் ஸ்டெய்னர் (Achim Steiner), ப்ரீத்தி சின்ஹாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கான யூ.என்.சி.டி.எப் -என் உதவி மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ப்ரீத்தி சின்ஹா இதில் அதிக கவனம் செலுத்துவார் என நம்புவதாகவும் அச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் யூ.என்.சி.டி.எப் உடன் தங்கள் அமைப்பான யூ.என்.டி.பி முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளதாக கூறினார். 

Also read... முன்னாள் IPS அதிகாரியின் தன்னலமற்ற செயல் - குவியும் பாராட்டுகள்!

யூ.என்.சி.டி எப்-ன் நிர்வாக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ப்ரீத்தி சின்ஹா, பின்தங்கிய நாடுகளில் இருக்கும் வறுமையை ஒழிக்க உள்ளூர் அரசுடன் யூ.என்.டி.சி.பி இணைந்து செயல்பட்டு வரும் திட்டங்களையும், நிதி மூலோபாயத்தையும் மேற்பார்வையிடுவார். மேலும், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார இழப்புகளை கணக்கிட்டு, அவற்றில் இருந்து ஏழை பெண்கள், இளைஞர்களை தொழில்கள் மூலம் மேம்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்த உள்ளார். முடங்கியுள்ள சிறு குறு தொழில்களை மேம்படுத்த உள்ளூர் அரசாங்கங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பணியாற்றுவார் என ஐ.நா கூறியுள்ளது. உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: