அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியன் ஆயில் ஒப்பந்தம்!

உலகளவில் அதிகக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.

news18
Updated: February 18, 2019, 2:17 PM IST
அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியன் ஆயில் ஒப்பந்தம்!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
news18
Updated: February 18, 2019, 2:17 PM IST
இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன். இந்த நிறுவனம் முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து ஒரு ஆண்டுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது.

உலகளவில் அதிகக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. இதுவரை இந்தியா ஈரானிலிருந்து தான் கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்து வந்தது. அமெரிக்கக் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியாவில் எந்த ஒரு நிறுவனமும் அதிகளவில் செய்ததில்லை.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததால் அங்கிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்டது.


எனவே முதன் முறையாக இந்தியன் ஆயில் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து ஒரு ஆண்டுக்கு தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி அமெரிக்காவிலிருந்து ஒரு நாளைக்கு 3 மில்லியன் டன், ஆதாவது 60,000 பேரல் கச்சா எண்ணெய்யை இந்தியன் ஆயில் இறக்குமதி செய்யும் என அதன் தலைவர் சஞ்ஜீவ் சிங் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு இந்தியன் ஆயில் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து நவம்பர் - ஜனவரி இடைபட்ட காலத்தில் 6 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதியை செய்ய ஒப்பந்தம் போட்டு இருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

Loading...

2025-ம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தை அமெரிக்கப் பிடிக்கும் வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.

மேலும் பார்க்க: பாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி
First published: February 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...