முகப்பு /செய்தி /வணிகம் / ஜெட் ஏர்வேஸ் நிலுவை தொகையை அளிக்கும் வரை பெட்ரோல் கிடையாது: இந்தியன் ஆயில்

ஜெட் ஏர்வேஸ் நிலுவை தொகையை அளிக்கும் வரை பெட்ரோல் கிடையாது: இந்தியன் ஆயில்

ஜெட் ஏர்வேஸ்.

ஜெட் ஏர்வேஸ்.

இந்திய விமான நிறுவனங்கள் நட்டம் அடைய விமான எரிபொருள் விலை அதிகமாக உள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நிலுவையில் உள்ள பாக்கியை செலுத்தாததால், ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கு எரிவாயு நிரப்பப்பட மாட்டாது என இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எரிவாயு நிரப்பப்பட மாட்டாது என இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் அறிவிப்பது இது முதல் முறையல்ல.

ஏற்கனவே பலமுறை கட்டண பாக்கிக்காக இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும், கடந்த ஒரே வாரத்தில் தற்போது 2-வது முறையாக எரிவாயு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண பாக்கியை செலுத்தும் வரை நாடு முழுவதும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கு எரிவாயு நிரப்பப்படாது என இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடன் மற்றும் நட்டத்தில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க அதன் நிறுவனர் தனது தலைவர் பதவியை இழந்தார்.  எஸ்பிஐ வங்கி ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க முன்வந்தது. அதன் பிறகும் நிறுவனத்தில் உள்ள பிரச்னை முடியாமல் ஜெட் ஏர்சேஸ் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய விமான நிறுவனங்கள் நட்டம் அடைய விமான எரிபொருள் விலை அதிகமாக உள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் விலையை விட விமான எரிபொருளின் விலை குறைவு என்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:

First published:

Tags: Indian Oil, Jet Airways