பாக். மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் எதிரொலி... பங்குச்சந்தை சரிவு..!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 429.37 புள்ளிகள் என 1.17 சதவீதம் சரிந்து 35,788.97 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 125.45 புள்ளிகள் என 1.14 சதவீதம் சரிந்து 10,755.65 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.

பாக். மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் எதிரொலி... பங்குச்சந்தை சரிவு..!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: February 26, 2019, 10:47 AM IST
  • Share this:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இன்று அதிகாலை இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தை சரிந்துள்ளது. 

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 3 இடங்களில் இன்று காலை இந்திய விமானப்படை புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக இன்று காலை 10:19 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 429.37 புள்ளிகள் என 1.17 சதவீதம் சரிந்து 35,788.97 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 125.45 புள்ளிகள் என 1.14 சதவீதம் சரிந்து 10,755.65 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.


மும்பை பங்குச்சந்தையில் ஐ.டி., டெக், டெலிகாம், ஆட்டோமொபைல், நிதி, மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி, ஆற்றல், கட்டுமானம், மெட்டல், ரியாலிட்டி என அனைத்துத் துறை சார்ந்து பங்குகள் சரிந்தன.

டிசிஎஸ், இந்துஸ்தான் யூனிலீவர், டாடா மோட்டார்ஸ் மற்றும் கோல் இந்தியாவைத் தவிரப் பிற முக்கிய நிறுவனப் பங்குகள் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் 30 பைசா சரிந்து 71.30 ரூபாயாக இருக்கிறது.சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.64 சதவீதம் சரிந்து 64.76 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 3.21 சதவீதம் சரிந்து 55.48 டாலராகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

திங்கட்கிழமை 10 வருட பத்திர முதலீட்டுத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் 7.42 சதவீதமாக இருந்தது. அது இன்று காலை 7.41 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: 
First published: February 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading