இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் (2021-22) 9.5 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம்( ஐ.எம்.எஃப்) கணித்துள்ளது.
உலக வங்கி (world bank),சர்வதேச நிதியம் (International Monetary Fund) ஆகியவற்றின் வருடாந்திர கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் , உலக பொருளாதார நிலை குறித்து சர்வதேச நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2020இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.3 சதவீதமாக சரிவடைந்தது. 2021இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாகவும், 2022இல் 8.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
செவ்வாய் அன்று நடைபெற்ற மெய்நிகர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், இந்தியாவுக்கான இந்த ஆண்டுக்கான வளர்ச்சி கணிப்பில் எங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. கொரோனா 2வது அலை கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு தரநிலையில் இறக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது, மிகவும் கடினமாக கொரோனா 2வது அலையில் இருந்து இந்தியா வெளிவந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும் இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 1 வருட நிலையான வைப்புநிதிகளுக்கு 6.50% வரை வட்டி வழங்கும் தனியார் வங்கிகளின் பட்டியல்!
அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சி 2021இல் 6 சதவீதமாகவும், 2022இல் 5.2 சதவீதமாகவும் இருக்கும். இதேபோல், சீனாவின் பொருளாதார வளா்ச்சி 2021இல் 8 சதவீதமாகவும், 2022இல் 5.6 சதவீதமாகவும் இருக்கும். ஒட்டுமொத்தமாக உலகளாவிய பொருளாதார வளா்ச்சி 2021இல் 5.9 சதவீதமாகவும், 2022இல் 4.9 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தொழில் தொடங்க திட்டமிடுகிறீர்களா? அரசு தரும் பயிற்சி, மானியம், உதவிகளை தெரிஞ்சுக்கோங்க..
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.