• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மிளிரப்போகும் இந்திய பொருளாதாரம் – ஜெப்ரீஸ் நிறுவனம் கணிப்பு

மிளிரப்போகும் இந்திய பொருளாதாரம் – ஜெப்ரீஸ் நிறுவனம் கணிப்பு

Narendra Modi

Narendra Modi

உலகரங்கில் மிளிர்கின்ற இந்திய பொருளாதாரம் குறித்து ஜெப்ரீஸ் தெரிவித்திருக்கும் கண்ணோட்டம் மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளன என்பதற்கு சான்றாகும்.

  • Share this:
    இந்தியாவின் பொருளாதாரம் நோய் தொற்று காலத்தால் தாக்கமுற்ற தொய்வு நிலையில் இருந்து மீண்டுள்ளது. 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 20.1% ஆக பெருவாரியாக உயர்ந்து வளர்ந்தது. இதுவே இன்று வரையிலான வளர்ச்சியில் மிகச் சிறப்பான ஒன்றாகும். தற்சமயம், அமெரிக்காவின் தரகு நிறுவனமான (புரோக்கரேஜ்) ஜெப்ரீஸ், இனி வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மேல் நோக்கி வளரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    இந்திய பொருளாதாரம் மீது ஜெப்ரீஸ் கொண்டிருக்கும் நம்பிக்கை வெளிச்சம்

    ஜெப்ரீஸை பொருத்தவரை, 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை, அதாவது வாஜ்பாய் காலகட்டத்தின் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் கார்ப்பரேட்டின் இலாபத்தன்மை, வீடு விற்பனைகள் மற்றும் வாரா கடன் குறைப்பு ஆகிய முக்கியமான வளர்ச்சிக்கு வித்திட்டன. அதை போலவே  இந்தியா வெகு விரைவில் அதிகப்படியான வளர்ச்சி விகிதத்தை எட்டவுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2000 – 2004 வரை 8.5% - 9 % வரை வளர்ச்சி கண்டது. இது அதற்கு முந்தைய ஆண்டுகளின் வளர்ச்சியை காட்டிலும் 5.5% - 6% வரை உயர்ந்திருக்கும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

    1997க்கும் 2004 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வங்கியின் மொத்த என்.பி.ஏ விகிதம் 16% த்திலிருந்து 8% ஆக குறைந்துள்ளது. அதை போலவே இந்திய வங்கி அமைப்புகளின் மொத்த என்.பி.ஏ வும் மார்ச் 2018 இல் 12%ஆக இருந்து தற்சமயம் 7% ஆக குறைந்துள்ளது. அதனூடே பெரும் நகர்வாக நிகர என்.பி.ஏ 59% ஆக குறைந்துள்ளதாக அமெரிக்க புரோக்கரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Also read:   பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்த 22 மாநிலங்கள்.. வரியை குறைக்காத மாநிலங்கள் எவை?

    மேலும்,  “ஒதுக்கீடு செலவுகள் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளன. அபாயங்களை எதிர்கொள்ள வங்கிகள் இன்றளவும் தயங்கும் வேளையில், அபாயத்தின்(ரிஸ்க்) தீவிரத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தற்போது ஏற்பட்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம். வலுவான திறன் மற்றும் ஏழாண்டு கால உயர் ஆர்.ஓ.ஈ ஆகியவை மேலும் அதிகப்படியான வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்” என்கிற கூடுதல் தகவலையும் தெரிவித்துள்ளது.

    “திறன்களை பயன்படுத்துதல் மற்றும் ரிஸ்க் (அபாயங்களை) எதிர்கொள்ளும் தன்மை குறைவாக இருத்தல் ஆகியவைகளால் பெருநிறுவன முதலீடு இன்னும் மந்தநிலையிலேயே உள்ளது. உடமைகளை அல்லது சொத்துக்களை அதிகரித்தல் என்பது ரிஸ்க்கை எதிர்கொள்வதில் இருக்கும் தயக்கத்தை குறைக்க உதவும். ஒட்டுமொத்தமாக, அடுத்த 4 – 6 ஆண்டுகளில் மூலதன செலவு என்பது ஏற்றத்துடன் தொடர வேண்டும்.” என்று முடித்துக் கொண்டது ஜெப்ரீஸ்

    இந்தியா பொருளாதாரத்தை மீட்டுருவாக்கியது மோடியாதாரம்:

    உலகரங்கில் மிளிர்கின்ற இந்திய பொருளாதாரம் குறித்து ஜெப்ரீஸ் தெரிவித்திருக்கும் கண்ணோட்டம் மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளன என்பதற்கு சான்றாகும். இந்திய பொருளாதார வளர்ச்சியை தாமதமாக அடைந்து கொண்டிருந்த சமயத்தில் மோடி அரசு ஆட்சிக்கு வந்தது. மத்திய அளவில் கொள்கைகள் முடங்கும் பிரச்சனை இருந்தது மற்றும் 2012-13 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக கடுமையாக சரிந்தது.

    Also read:  பாகிஸ்தான் வெற்றியை மனைவி பட்டாசு வெடித்து கொண்டாடியதாக போலீசில் புகார் கொடுத்த கணவர்!

    ஆட்சிக்கு வந்த பின் மோடி அரசு, ஜன் தன் யோஜனா மற்றும் பணமதிப்பு நீக்கம் போன்ற கட்டமைப்பின் மீதான சீர்திருத்தங்களை நிகழ்த்தியது. இதன் மூலம் இந்திய பொருளாதாரம் முறையான தன்மையில் அதிகரித்தது. ஆரம்ப காலகட்டத்தில் மோடி அரசு அதிகப்படியான வளர்ச்சி விகிதத்தை உறுதிப்படுத்தியது. 2015 – 16 ஆம் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருந்தது.

    இருப்பினும் 2016க்கு பிறகு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி) அறிமுகம் போன்ற சீர்திருத்தங்களில் மோடி அரசு கவனம் செலுத்தியது. இந்த சீர்திருத்தங்கள் சில ஆண்டுகள் வளர்ச்சி விகிதத்தை தடுத்திருந்தது மற்றும் பெரும்  நிறுவனங்களுக்கு இடையிலான வணிகங்கள் மோசமடைதல் அதுமட்டுமின்றி கோவிட்-19 நோய் தொற்று போன்ற உலகளாவிய பிரச்சனைகளால்   கடந்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டாக வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளது. ஆயினும் கூட மோடி அரசால் செய்யப்பட்ட கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள் நம் பொருளாதாரத்தின் அடிப்படையை வலுப்படுத்தியுள்ளன. இது வரவிருக்கும் ஆண்டுகளில் சிறந்த வளர்ச்சியை நிச்சயம் தூண்டும்.

    பின்னர், மோடி அரசு, திவால் மற்றும் திவாலாதல் குறியீடு (IBC) அது மட்டுமின்றி ரியல் எஸ்டேட் (முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி) சட்டம் 2016, போன்ற சீர்த்திருங்களை அறிமுகப்படுத்தியது. இது இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்து பிரச்சனைகளை சமாளித்து இந்திய சொத்து சந்தையின் நம்பிக்கையை மீட்டெடுத்தது

    Also read:   பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு அதிக முக்கியத்துவம் ஏன் – பின்னணி

    மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புற (PMAY-U) திட்டத்தின் கீழ் 3.61 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல் போன்ற  மோடி அரசின் சமூக நலத் திட்டங்களும் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு உந்துதலாக இருக்கின்றன. குறைவான விலையில் வீடுகளை தருவதற்கு மோடி அரசு எடுத்துக் கொண்ட முனைப்பு பாராட்டுக்குரியது. மேலும் ஜெப்ரீஸ்ஸின் கூற்றுப்படி,  வீடுகளை நிர்மாணிப்பதன் மூலம் மிகப்பெரிய வேலைவாய்ப்பு களம் மற்றும் பல்வேறு விதமான தொடர்புகள் போன்றவை உருவாகி பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாகி உள்ளது.

    கிறிஸ்டோபர் வுட், ஈக்யூட்டி ஸ்ட்ராட்டஜி யின் சர்வதேச தலைவர், ஜெப்ரீஸ். 
    இவர் இந்திய பங்குகளின் மீது கொண்டிருக்கும் நேர்மறையான பார்வை:

    இந்தியாவின் பங்கு சந்தை கடந்த ஓராண்டாக மிக அற்புதமாக செயல்பட்டு வருகிறது.  இதனால் தான் யூ.பி.எஸ், ஹெச்.எஸ்.பி.சி, நொமுரா மற்றும் மார்கன் ஸ்டான்லி போன்ற ஆய்வு & வீட்டு புரோக்கரேஜ் நிறுவனங்கள் உயர்ந்து வரும் மதிப்பீட்டை காரணம் காட்டி தங்களின் தரத்தை குறைத்துள்ளன.

    Also read:  மத்திய சிறைக்குள் வெடித்த கலவரம்.. அதிகாரிகளை சிறைக்குள் சிறை வைத்த கைதிகள்.

    இருப்பினும், கிறிஸ்டோபர் வுட், ஈக்யூட்டி ஸ்ட்ரேட்டஜியின் சர்வதேச தலைவர், ஜெப்ரீஸ் அவர்கள் நம் பங்குகளின் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி கதை தற்சமயம் தொடங்கியிருப்பதாக ஜெப்ரீ நம்புவதால், ஒவ்வொரு சரிவின் போதும் இந்திய பங்குகளை வாங்குவதாக திரு.வுட் தெரிவித்துள்ளார். மேலும்,  “வால் ஸ்ட்ரீட்டில் நிகழும் அச்சத்தால் இந்திய பங்குகளில் ஏற்படும் எந்தவொரு விற்பனையும் இந்திய பங்கு சந்தைகளுக்கான வாய்ப்புகளையே வழங்கும்.. “என்றார் அவர்.

    எனவே, இனி வரும் காலங்களில் இந்திய பொருளாதாரம் அதிக வளர்ச்சியை நேர்மறையான ஏற்றங்களை காணவிருக்கிறது. மற்றும் இந்த முன்னேற்ற பாதைக்கான மொத்த பாராட்டும், மொத்த பொறுப்பும் மோடியாதாரத்தை சேர்ந்ததே ஆகும்.

    கு. பிரதீப் குணசேகரன் - கட்டுரையாளர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: