2019-ம் ஆண்டில் பொருளாதாரத்தில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளுமா இந்தியா?

2018-ம் ஆண்டுச் சர்வதேச பொருளாதார வளர்ச்சி சராசரி 3.2 சதவீதமாக இருந்தது.

Web Desk | news18
Updated: January 4, 2019, 8:56 PM IST
2019-ம் ஆண்டில் பொருளாதாரத்தில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளுமா இந்தியா?
இந்திய பொருளாதாரம்
Web Desk | news18
Updated: January 4, 2019, 8:56 PM IST
2018-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக வேகமாக வளர்ந்தது. எனவே 2019-ம் ஆண்டு இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளிச் சிறந்த பொருளாதாரம் படைத்த நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் இதில் உள்ள ஒரு மிகப் பெரிய சிக்கல் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தல். மறு பக்கம் அரசு மத்திய வங்கியிடம் உள்ள உபரி தொகையைப் பெற முயல்வதும் முதலீட்டாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனாலும் பொருளாதாரம் சரிய வாய்ப்புகள் உள்ளது. எனவே 2019-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு என்னவெல்லாம் முக்கியக் காரணமாக இருக்கும் என்று இங்குப் பார்ப்போம்.

சர்வதேச மந்தம்:


2018-ம் ஆண்டுச் சர்வதேச பொருளாதார வளர்ச்சி சராசரி 3.2 சதவீதமாக இருந்தது. இது 2019-ம் ஆண்டு 2.8 சதவீதமாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே சரிந்துள்ள நிலையில் வரும் மாதங்களில் அமெரிக்க, இங்கிலாந்து பொருளாதாரமும் மந்தமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாணய கொள்கை கூட்டம்:


தேர்தலுக்கு முந்தைய ஆர்பிஐ நாணய கொள்கை கூட்ட அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் புதியதாக ஆர்பிஐ கவர்னராகப் பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸ் பங்கேற்கும் முதல் நாணய கொள்கை கூட்டம் என்பதால் நடுநிலையான முடிவு எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
Loading...

தேர்தல்:


2019-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அதில் பாஜக தோல்வி அடைந்தால் அது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பின்னடைவாக மாறும்.

மத்திய அரசு எப்படியாவது வரும் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை அமைக்க வேண்டும் நோக்கத்தில் ஏமாற்றத்தில் இருக்கும் விவசாயிகளைக் கவர இடைக்காலப் பட்ஜெட்டின் போது மிகப் பெரிய திட்டங்களுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக மீண்டும் வெற்றி பெறும் போது 2019-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் என நோமுரா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மூத்த தலைவர் மற்றும் பொருளாதார நிபுணருமான சோனல் வர்மா கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: பூமிக்கு அடியில் கேபிளில் மின்சாரத்தை கொண்டு சென்றால் எவ்வளவு மிச்சமாகும்?
First published: January 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...