முகப்பு /செய்தி /வணிகம் / 2021ல் இந்தியாவிற்கு ரூ.44,600 கோடி அளவிலான பொருளாதார மதிப்பை உருவாக்கியுள்ள Uber!

2021ல் இந்தியாவிற்கு ரூ.44,600 கோடி அளவிலான பொருளாதார மதிப்பை உருவாக்கியுள்ள Uber!

 Uber

Uber

கார் வசதி இல்லாத சுமார் 84% யூஸர்கள், சொந்தமாக வாகனம் இல்லை என்பதால் உபர் போன்ற ரைட்ஷேரிங் சர்விஸ்களை தேர்ந்தெடுக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, India California California California

நாட்டில் பிரபல கேப் புக்கிங் சர்விஸ் ஆப்ஸாக இருக்கும் உபர் (Uber) நிறுவனம், கடந்த 2021ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ரூ.44,600 கோடி அளவிலான மதிப்பை உருவாக்கி இருக்கிறது.

இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.1.5 டிரில்லியன் மதிப்பிலான consumer surplus-ஐ ஜெனரேட் செய்துள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 சதவீதத்திற்கு சமம் ஆகும். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள் அறிக்கையில் 96% யூஸர்கள் இந்த சர்விசை யன்படுத்த ஒரு முக்கிய காரணம் அது வழங்கும் வசதி(சௌகரியம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Uber-ஆல் அமைக்கப்பட்ட பப்ளிக் ஃபர்ஸ்ட் அறிக்கையின்படி, நிறுவனத்தின் பொருளாதார மதிப்பு 2021-ஆம் ஆண்டில் ரூ.44,600 கோடி என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. டிரைவர்களுக்கு நிறுவனம் செலுத்திய பணம், வாகனங்களுக்கான அவர்களின் செலவு மற்றும் கூடுதல் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டது. இந்த அறிக்கையின்படி, டிரைவர்கள் Uber மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.1,700 கோடி சம்பாதிக்கிறார்கள், இது அடுத்து கிடைக்கும் சிறந்த வேலை வாய்ப்பை விட 49% அதிகம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

அதாவது இந்த தொகையானது அடுத்த சிறந்த மாற்று வேலை விருப்பத்திலிருந்து அவர்கள் சம்பாதித்ததை விட சராசரியாக 49% அதிகம்.Uber நிறுவனத்திற்கு இந்தியாவில் சுமார் நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட டிரைவர்-பார்ட்னர்ஸ் இருப்பதாக தெரிகிறது. இந்திய பொருளாதாரத்திற்கு கடந்த ஆண்டு உபர் வழங்கி இருக்கும் பங்களிப்பை நினைத்து பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறார் உபர் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் பிரப்ஜீத் சிங். மேலும் பேசி இருக்கும் இவர், ஒவ்வொரு ரைடிலும் அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டு வருவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

ALSO READ | மளிகை விற்பனையை நிறுத்திய மீஷோ.. 300 ஊழியர்களின் வேலை பறிபோனது

கடந்த 2021-ஆம் ஆண்டில் கோவிட் 2-வது அலையால் நாடு இக்கட்டான சூழலில் இருந்த நேரத்திலும் கூட, இந்திய பொருளாதாரத்திற்கான பொருளாதார மதிப்பில் ரூ.44,600 கோடியை உபர் பங்களித்துள்ளதை நாங்கள் சிறப்பாக கருதுகிறோம் எனவும் கூறி இருக்கிறார். "கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவில் நாங்கள் மேற்கொண்ட பயணம் இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யும் அளவிற்கு வாளர்ந்துள்ளதை கண்டு பெருமை கொள்கிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆய்வின்படி யூஸர்களின் 16.8 கோடி மணிநேரங்களுக்கு மேல் உபர் நிறுவனம் மிச்சப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. அதே போல இந்திய ரைடர்களின் கூற்றுப்படி கடந்த சில ஆண்டுகளில் அவர்கள் சிறந்த முறையில் அனுபவித்து வரும் மிக முக்கிய போக்குவரத்து வழி ரைட் ஷேரிங் என்பதையும் அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது.

ALSO READ | ஆரோக்கியமான நிதி வாழ்க்கைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை இதோ!

96% யூஸர்கள் உபரை பயன்படுத்துவதற்கு வசதி முக்கியக் காரணம் என்று கூறினாலும், 97% பெண் யூஸர்கள் ரைடு-ஹெய்லிங் ஆப்ஸான உபரை பயன்படுத்த பாதுகாப்பும் ஒரு முக்கியக் காரணியாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள். கார் வசதி இல்லாத சுமார் 84% யூஸர்கள், சொந்தமாக வாகனம் இல்லை என்பதால் உபர் போன்ற ரைட்ஷேரிங் சர்விஸ்களை தேர்ந்தெடுக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

First published:

Tags: California, Ola Cabs, Uber