Home /News /business /

3 கொரோனா அலைகளை தாண்டி வலுவாக எழுச்சி கண்ட இந்திய பொருளாதரம் - அமெரிக்கா கருவூலத் துறை பாராட்டு

3 கொரோனா அலைகளை தாண்டி வலுவாக எழுச்சி கண்ட இந்திய பொருளாதரம் - அமெரிக்கா கருவூலத் துறை பாராட்டு

இந்திய பொருளாதார வளர்ச்சி

இந்திய பொருளாதார வளர்ச்சி

2021 ஆண்டில் இந்தியா தனது தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியதன் விளைவாக பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் எழுச்சி கண்டது என அமெரிக்க கருவூலத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

    கொரோனா மூன்று அலைகளாக பாதிப்பை ஏற்படுத்திய பிறகும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக மீண்டு வந்ததாக அமெரிக்க கருவூலத் துறை தனது அறிக்கையில் பாராட்டியுள்ளது. அமெரிக்க அரசின் கருவூலத் துறை தனது அரையாண்டு அறிக்கையை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

    அதில், இந்தியாவின் பொருளாதாரம் குறித்து பாராட்டி விரிவான கருத்துக்களை கூறியுள்ளது. அதன்படி, கோவிட் அலை காரணமாக இந்திய பொருளாதாரம் மோசமான விளைவுகளை சந்தித்தது. 2020ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் சுருங்கியது. அதேவேளை, 2021 ஆண்டில் இந்தியா தனது தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியதன் விளைவாக பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் எழுச்சி கண்டது. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 44 சதவீத இந்திய மக்கள் முழுமையான தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொண்டனர். இதன் காரணமாக 2020ஆம் ஆண்டு வீழ்ச்சிக்குப் பின் 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஓமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்பட்டாலும், உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் குறைந்தே காணப்பட்டுள்ளது.

    அதேபோல், இந்திய அரசும் பெருந்தொற்று காலத்தில் நிதியுதவியை தொடர்ந்து தந்த வந்தது. இதன் காரணமாக 2022ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2021ஆம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் சரக்கு இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக ஒட்டுமொத்த இறக்குமதி 54 சதவீதம் அதிகரித்தது. அதேபோல், ஏற்றுமதியும் 2021ஆம் ஆண்டில் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் இந்தியாவின் பொருளாதார மீட்சியை குறிக்கின்றன.

    இதையும் படிங்க: மாதம் ரூ. 5000 வரை கிடைக்கும்.. போஸ்ட் ஆபீஸூக்கு சென்று உடனே இதை செய்யுங்கள்!

    அதேபோல், 2021ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு அனுப்பப்படும் ரெமிட்டன்ஸ் தொகை 5 சதவீதம் உயர்ந்து 87 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவும் மேம்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க கருவூல அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: COVID-19 Second Wave, Indian economy

    அடுத்த செய்தி