தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இந்திய நிறுவனங்கள்

Web Desk | news18
Updated: July 31, 2019, 11:11 PM IST
தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இந்திய நிறுவனங்கள்
பங்குச்சந்தை (கோப்புப்படம்)
Web Desk | news18
Updated: July 31, 2019, 11:11 PM IST
பொருளாதார வளர்ச்சி 5 டிரில்லியன் டாலராக  இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், பல இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.

வாகன உற்பத்தி துறையில் 3 கோடிக்கு அதிகமானோர் பணியாற்றுகின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாகன துறையின் பங்கு 7%.

தற்போதைய நிலையில், ஏறக்குறைய 30 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல், சில தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு வந்துள்ளது.


வாகன துறையில் விற்பனை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்துள்ளது.

இந்த சரிவில் இருந்து மாருதி நிறுவனமும் தப்பவில்லை. மாருதி நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒராண்டில் 40% சரிந்துள்ளது.

இதற்கிடையில், பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க எந்த திட்டமும் இல்லை, மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய எந்த வசதியும் இல்லாத நிலையில் மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் தருவது மிகப்பெரிய பிரச்சனையாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கருதுகின்றன.

Loading...

மிகவும் பிரபலமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் 2018-ம் ஆண்டு முதல் காலாண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, தற்போது 11% சரிந்துள்ளது.

மேலும் ஐடிசி, கோத்ரேஜ் போன்ற நிறுவனங்களும் ஒற்றை இலக்கத்திலேயே வளர்ச்சி அடைந்துள்ளன.

மத்திய பட்ஜெட்டில், பெரும் பணக்காரர்களுக்கான வரி உயர்த்தப்பட்டது. இது இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை குறைத்து வருகிறது. இதன் தாக்கம் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் எதிரொலித்து வருகிறது.

இந்தியாவில் இது போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது, கடந்த ஓராண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 10% குறைந்துள்ளது.

அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போர், உலக அளவில் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

இந்திய பொருளாதார சுணக்கத்திற்கு உள்நாட்டு காரணிகளே பிரதானம் என்று சர்வதேச நிதியம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக விவசாயத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள், ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையை சரியான நேரத்தில் வழங்குவது போன்றவை பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்று கருதப்படுகிறது.

மற்றொரு புறம், ஜிஎஸ்டி வரியை அமலுக்கு கொண்டு வரும் முன்னர், அரசு அதை முயற்சித்து பார்க்கவில்லை, இதன் காரணமாகவே வரி தாக்கல் செய்வதில் உள்ள குளறுபடி தொடங்கி, குறைவான வரி வருவாய் வரை அனைத்து பிரச்னைகளும் ஏற்பட்டது என்று சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமராக மோடி 2-வது முறை பதவியேற்ற முதல் 50 நாட்களில் முதலீட்டாளர்கள் 12 லட்சம் கோடி நஷ்டம் அடைந்துள்ளனர். பங்குச்சந்தையில் பெரும்பாலான பங்குகள் தொடர்ந்து சரிவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Watch: கடத்தப்பட்டாரா தமிழ் நடிகை?

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...