நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு

இந்தியாவின் ஜிடிபி 2015-2016 நிதி ஆண்டில் 8.2 சதவீதமாகவும், 2016-2017 நிதி ஆண்டில் 7.1 சதவீதமாக இருந்தது.

Web Desk | news18
Updated: January 8, 2019, 6:40 PM IST
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு
ஜிடிபி
Web Desk | news18
Updated: January 8, 2019, 6:40 PM IST
இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 7.2 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017-2018 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது.

பொருளாதார வளர்ச்சி உயர்வை எதிர்பார்க்க முக்கியக் காரணம் விவசாயம் மற்றும் உற்பத்தித் துறை செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2018-2019 நிதி ஆண்டில் முதல் முன்கூட்டியே தேசிய வருவாய் மதிப்பீடுகளை வெளியிட்ட மத்திய புள்ளியியல் அலுவலகம், 2018-2019 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

அசல் ஜிடிபி 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக அதிகரிக்கும். விவசாயம், காடுகள் மற்றும் மீன்பிடித்தல் துறைகளில் வளர்ச்சியானது 3.4 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.

2017-2018 நிதி ஆண்டில் 5.7 சதவீதமாக இருந்த உற்பத்தித் துறையின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 8.3 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் ஜிடிபி 2015-2016 நிதி ஆண்டில் 8.2 சதவீதமாகவும், 2016-2017 நிதி ஆண்டில் 7.1 சதவீதமாக இருந்தது. 2017-2018 நிதி ஆண்டில் 6.7 சதவீதமாக இந்தியாவின் ஜிடிபி சரிந்ததற்குப் பண மதிப்பு நீக்கம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது மற்றும் ஜிஎஸ்டி வரி விகிதம் அறிமுகம் செய்யப்பட்டது என்று வல்லுநர்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க: ரயில் நிலையத்துக்கு பயணிகள் 20 நிமிடங்களுக்கு முன்னரே வர வேண்டுமா?
Loading...
First published: January 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...