Home /News /business /

கவலைக்குரிய நிலையில் இந்திய பொருளாதாரம்... சீர்திருத்தம் வேண்டும்: ப.சிதம்பரம்

கவலைக்குரிய நிலையில் இந்திய பொருளாதாரம்... சீர்திருத்தம் வேண்டும்: ப.சிதம்பரம்

கோப்பு படம்

கோப்பு படம்

நாட்டில் நிலவும் சமத்துவமின்மை, 10% க்கும் அதிகமான மக்கள் மிக மோசமான வறுமையில் தவிப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தில் குறைபாடு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என சிதம்பரம் கூறியுள்ளார்.

    இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழல் மிக மோசமான நிலையில் உள்ளதால், 1991ஆம் ஆண்டு சீர்திருத்தம் போல மீண்டும் ஒரு சீர்திருத்தம் நாட்டிற்கு தேவை என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பேசியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்து புத்துயிர் தருவது தொடர்பாகவும், அடுத்து வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்கள் தொடர்பாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினர்.

    இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப சிதம்பரம் இந்த மாநாட்டில் உரையாற்றினார். அவர் பேசுகையில், 'கடந்த எட்டு ஆண்டுகளாக நாட்டில் மந்தமான பொருளாதார வளர்ச்சி நிலவிவருகிறது. இது தான் இந்த அரசின் மாபெரும் சாதனையாகும். பெருந்தொற்றுக்கு பின்னரும் நாட்டின் வளர்ச்சி தேக்க நிலையில் உள்ளது.

    மிகமோசமாக அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வர காரணமாக மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி உறவு பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதிநிலை இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டு ஆட்சி காலத்தில் புதிய தொழில்கள் பெருகி, நடுத்தர மக்கள் வளர்ச்சி கண்டு, 27 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் கொண்டுவரப்பட்டனர். 1991ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது 30 ஆண்டுகள் கழித்து இந்திய பொருளாதாரம் மீண்டும் மாபெரும் மாற்றத்தை சந்திக்க வேண்டிய தேவை உள்ளது. நாட்டில் நிலவும் சமத்துவமின்மை, 10 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மிக மோசமான வறுமையில் தவிப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தில் குறைபாடு போன்றவற்றை நாம் உடனடியாக கவனித்து சீர் செய்ய வேண்டும்.

    இதையும் படிங்க: 6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்களை நீக்கிய இந்திய ரயில்வே

    சர்வதேச சூழலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் அழுத்தம் தருகிறது. இந்த மூன்று நாள் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி வகுக்கும் கொள்கைகளால் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என நம்புகிறேன் என்றார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Chidambaram, Indian economy, Indian National Congress

    அடுத்த செய்தி