• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • FUTURE RIL DEAL: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்க்கு இந்திய விநியோகஸ்தர் கூட்டமைப்பு கடிதம்!

FUTURE RIL DEAL: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்க்கு இந்திய விநியோகஸ்தர் கூட்டமைப்பு கடிதம்!

 அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ்

அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் எங்கள் கூட்டமைப்பில் உள்ள 6,000 சிறிய விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு Future குழுமம் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பாக்கி வைத்துள்ளது.

  • Share this:
Future Group - ரிலையன்ஸ் இடையேயான ஒப்பந்தத்தை தடுக்க வேண்டாம் என அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்-க்கு இந்திய விநியோகஸ்தர் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்திய ரீடெய்ல் துறையில் கால்பதிக்கத் துடிக்கும் ஜெஃப் பீஸோஸ் தலைமையிலான அமேசான் நிறுவனம், ரிலையன்ஸ் மற்றும் Future குழுமத்திற்கு இடையிலான 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை தடுக்க சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியதாகும் என சுட்டிக்காட்டி அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ்-க்கு அகில இந்திய நுகர்வோர் தயாரிப்புகள் விநியோகஸ்தர் கூட்டமைப்பு (AICPD) கடிதம் எழுதியுள்ளது.

இந்திய FMCG துறையில் விநியோகஸ்தர்கள், பங்குதாரர்கள் மற்றும் சப்ளையர்கள் என சுமார் 10 லட்சம் பேரை அங்கமாக கொண்டிருக்கும் எங்கள் கூட்டமைப்பு உங்களுடைய சட்ட நடவடிக்கையால் மோசமான நிதி நிலைமையில் சிக்கித் தவிக்கிறது. எங்கள் உறுப்பினர்களின் குடும்பத்தினர் இதனால் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் எங்கள் கூட்டமைப்பில் உள்ள 6,000 சிறிய விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு Future குழுமம் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பாக்கி வைத்துள்ளது.

உலக ஆதிக்கத்தினை காட்டும் உங்கள் விளையாட்டு போக்கினை நீங்கள் தொடர்ந்து கொண்டிருந்தால் எங்களுக்கு தான் 'சேதம்' . எங்கள் உறுப்பினர்களுக்கு வந்து சேரவேண்டிய பண வரவுகள் தடைபட்டுள்ளன. எங்கள் குடும்பங்கள் மிகுந்த நிதி அழுத்தத்தில் உள்ளன மற்றும் மன மற்றும் உணர்ச்சி துயரங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த சிறிய போரிலிருந்து உங்களை பின்வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம், இல்லையென்றால் எங்களின் கடன்களை நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள். என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கிஷோர் பியானி தலைமையிலான Future குழுமம், இந்தியாவில் உள்ள அதன் சொத்துக்களை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 24,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொண்டது. இருப்பினும் Future குழுமத்தில் 49% பங்குகளை கொண்டுள்ள அமேசான் நிறுவனம், Future மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் சில ஒப்பந்தங்களுக்கு எதிராக இருப்பதாக தெரிவித்து இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: