ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களே அக்டோபர் மாதத்திற்குள் இதை செய்து விடுங்கள்!

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களே அக்டோபர் மாதத்திற்குள் இதை செய்து விடுங்கள்!

சேமிப்பு வட்டி

சேமிப்பு வட்டி

இந்த தகவல் எஸ்.எம்.எஸ் வழியாக இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒருவேளை இதுவரைக்கு இந்த தகவல் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை. இன்னும் 1 மாதம் தான் உள்ளது அதற்குள் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இதை செய்துவிடுங்கள்.

அதாவது இந்தியன் வங்கி நிர்வாகம் ஏற்கெனவே அறிவிருந்தப்படி வரும் அக்டோபர் 1 க்கு பிறகு இந்தியன் வங்கி செக் புக்கை பயன்படுத்த முடியாது .எனவே வாடிக்கையாளராகிய நீங்கள் உடனே புதிய செக் புக்கிற்கு விண்ணப்பியுங்கள்.இன்னும் 1 மாத காலம் மட்டுமே உள்ளதால் நேரத்தை கழிக்காமல் முடிந்த அளவு சீக்கிரமாக செய்து முடித்துவிடுங்கள். உங்களிடம் இருக்கும் பழைய செக் புக்கை அக்டோபர் முதல் பயன்படுத்த முடியாது. பழைய செக் புக்கை பயன்படுத்தினால் அது வங்கியில் செல்லுபடியாகாது.இந்த தகவல் எஸ்.எம்.எஸ் வழியாக இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் இதற்கு விண்ணபிப்பது எளிதாக்கப்பட்டுள்ளது.

புதிய செக் புக்கை விண்ணப்பித்து வாங்க வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் "இந்தியன் வங்கி" கிளைக்கும் சென்று புதிதாக செக் புக்கினை விண்ணப்பித்து வாங்கி கொள்ளலாம். எந்தவித சிக்கலும் இன்றி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்த மாற்றத்தை செய்து முடிக்குமாறு வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நீங்கள் அப்ளை செய்த 1 வாரத்திற்குள் உங்கள் கையில் புதிய செக் புக் இருப்பதற்கான அனைத்து வசதிகளையும் வங்கி செயல்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே, இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இதை நினைவில் கொள்ளுங்கள். இந்த மாதத்தில் அரசு விடுமுறை நாட்களும் வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும். அதனால் நேரம் கடத்தாமல் உடனே வங்கிக்கு சென்று புதிய செக் புக்கினை வாங்கிடுங்கள். அதே போல் வீட்டில் இந்தியன் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் இதை நினைவுப்படுத்தி அவர்களையும் அக் 1 ஆம் தேதிக்குள் புதிய செக் புக்கை வாங்க அறிவுருத்துங்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Indian Bank