பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி முதலீட்டாளர்களுக்காக ஒரு சிறப்பு நிலையான வைப்புத் தொகை (fixed deposit) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு "IND UTSAV 610" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.610 நாட்கள் மட்டுமே கால அளவை கொண்டுள்ள இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டியும் அதிகம். இதுகுறித்த அறிவிப்பு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு ஆண்டுக்கு 6.10% வட்டி, மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 6.25% வட்டி மற்றும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 6.5% வட்டி விகிதம் இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் ரூ. 50,000 வரை பென்சன் கிடைக்கும்.. கலக்கும் எல்.ஐ.சி திட்டம்!
இந்தியன் வங்கியின் "IND UTSAV 610" சிறப்பு கால வைப்புத் திட்டத்தின் காலாவதி தேதி அக்டோபர் 31, 2022 என அறிவித்துள்ளது. அதற்குள் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் சேரலாம். INDOASIS செயலியைப் பயன்படுத்தி, இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை முன்பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்கள் "IND UTSAV 610" நிரந்தர வைப்புத் திட்டத்தை எளிதாகவும் வசதியாகவும் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக இந்தியன் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றியது.
ரூ. 2 கோடிக்கு கீழ் உள்ள டெபாசிட்டுகளுக்கு இந்தியன் வங்கி இப்போது 2.80% முதல் 5.65% வரையிலான வட்டி விகிதங்களுடன் 7 நாட்கள் முதல் 5 ஆண்டுகளுக்கும் மேலான முதிர்வுகளுடன் நிலையான வைப்புகளை வழங்குகிறது.மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு 5.75% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6.25% என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கு குறைவான காலத்துக்கான நிலையான வைப்புகளுக்கு வழங்குகிறது.
கோடிகளில் வருமானம்.. உங்களுக்காகவே போஸ்ட் ஆபீஸ் தரும் மிகச் சிறந்த வாய்ப்பு!
அக்டோபர் 31, 2022 வரை செல்லுபடியாகும் "IND UTSAV 610" டெபாசிட் திட்டத்தை முன்பதிவு செய்பவர்களுக்கு, இந்தியன் வங்கி மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு 6.10% வட்டி விகிதத்தை வழங்குகிறது, மேலும் மூத்த குடிமக்களுக்கு 0.15% கூடுதல் சிறப்பு வட்டி விகிதங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fixed Deposit, Indian Bank, Savings