இந்தியன் வங்கி செக் புக் உங்க கிட்ட இருக்கா? அப்ப உடனே இதை செஞ்சிடுங்க!

செக் புக்

நீங்கள் அப்ளை செய்த 1 வாரத்திற்குள் உங்கள் கையில் புதிய செக் புக் இருக்கும்

 • Share this:
  இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களாக இன்னும் வங்கியின் பழைய செக்புக்கை யூஸ் செய்கிறீர்களா? உடனே இதை படியுங்கள்

  இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இதுவரை இந்த தகவல் குறித்து தெரிந்து கொள்ளாமல் இருந்தால், நேரம் கடத்தாமல் உடனே இந்த மாதத்திலேயே இதை செய்து விடுங்கள். ஏனெனில் வரும் அக்டோபர் 1 க்கு பிறகு இந்தியன் வங்கி செக் புக்கை பயன்படுத்த முடியாது. இதை வங்கி நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளராகிய நீங்கள் உடனே புதிய செக் புக்கிற்கு விண்ணப்பியுங்கள்.

  பழைய காசோலை புத்தகத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விரைவில் புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனிலும் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது அக்டோபர் 1 க்கு பிறகு வாடிக்கையாளர்கள் பழைய செக் புக் பயன்படுத்தினால் வங்கியில் செல்லுபடியாகாது. இதை நினைவில் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் அருகில் இருக்கும் இந்தியன் வங்கி கிளைக்கு சென்று புதிய செக் புத்தகத்திற்கு விண்ணப்பிக்கலாம். எந்தவித சிக்கலும் இன்றி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்த மாற்றத்தை செய்து முடிக்குமாறு வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அப்ளை செய்த 1 வாரத்திற்குள் உங்கள் கையில் புதிய செக் புக் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வெறும் 59 நிமிடத்தில் இந்த 5 வங்கிகளில் நீங்கள் லோன் பெறலாம்! எப்படி தெரியுமா?

  இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் எஸ்.எம்.எஸ் மற்றும் மேசேஜ் வழியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய செக் புக்கை விண்ணப்பித்து வாங்க வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை அவகாசம் வழஙக்கப்பட்டுள்ளது. எனவே நேரம் கடத்தாமல் வாடிக்கையாளர்கள் உடனே இதனை செய்து முடியுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: