Home /News /business /

2026-27-ல் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர், 2033-34-ல் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரும்

2026-27-ல் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர், 2033-34-ல் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரும்

தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன்

தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன்

2026-27ல் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும், 2033-34ல் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும் உயரும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் (CEA) வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.

UNDPஇந்தியா, ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆனந்த நாகேஸ்வரன் மற்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களை விட இந்தியா ஒப்பீட்டளவில் சிறந்த இடத்தில் உள்ளது என்றார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “2026-27க்குள் 5 டிரில்லியன் டாலர்களை எட்டுவோம் என்பது மேலோட்டமாகப் பார்த்தால் நம்பிக்கையாகவும், ஏன் லட்சியார்த்தமாகவும் தெரியும். இப்போது நாம் 3.3 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கிறோம்.
எனவே 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வது ஒன்றும் பெரிய கடினமான காரியமல்ல.

பிறகு நீங்கள் பெயரளவிலான ஜிடிபி வளர்ச்சியை டாலர் அடிப்படையில் 10% என்று அனுமானித்தால் 2033-34-ம் ஆண்டுவாக்கில் 10 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக உயர்வதையும் நீங்கள் கணிக்க முடியும்” என்றார்.

உலக வங்கி நடப்பு நிதியாண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சியை 7.5% ஆகக் குறைத்துள்ளது. ஏனெனில் பணவீக்கப் பெருக்கம், விநியோகச் சங்கிலித் தொடர் இடையூறுகள், மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் வளர்ச்சியைக் குறைக்கின்றன என்கிறது உலக வங்கி.

இந்தியப் பொருளாதாரம் கடந்த நிதியாண்டில், 2021-22-ல் 8.7% ஆக அதிகரித்தது, இது இதற்கு முந்தைய ஆண்டில் 6.6% ஆகச்சரிந்திருந்தது. 2022-23 இன் மூன்றாவது நிதி மேலாண்மைக் கொள்கையில், ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சியை 7.2% ஆக கணித்து இருந்தது. ஆனால் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகப் பொருளாதார மந்தநிலை என்ற எச்சரிக்கையையும் விடுத்தது.

இந்நிலையில் 2026-27-ல் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Published by:Muthukumar
First published:

Tags: Indian economy

அடுத்த செய்தி