முகப்பு /செய்தி /வணிகம் / வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விரைவில் முன்னேறும் - ஆர்பிஐ

வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விரைவில் முன்னேறும் - ஆர்பிஐ

மாதிரி படம்

மாதிரி படம்

உலக அளவிலும், இந்தியாவிலும் விநியோக சங்கிலி அழுத்தங்கள் உச்சத்தில் உள்ளன, இதனால் பணவீக்க அழுத்தங்களின் முக்கிய ஆதாரம் குறையக் கூடும்.

உலக பொருளாதாரங்கள் மந்தநிலையை நோக்கிச் செல்லும் அச்சங்களுக்கு மத்தியில் இந்திய ரூபாயின் மதிப்பு சமீபத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. எனினும் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து நிலைத்து நிற்கும் என்றும், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக முன்னேற்றப் பாதையில் செல்லும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றில் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் பணவீக்கத்திற்கு முன் இந்தியாவின் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது. சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் நாட்டின் பொருளாதார வலிமையை அசைத்துள்ளதாகவும் கூறியுள்ளது. எவ்வாறாயினும் நாட்டின் பொருளாதாரம் எப்போது இயல்பு நிலைக்கு மாறும் என்பதைப் பற்றி ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை.

சமீபத்திய தென்மேற்குப் பருவமழை, விதைப்பு மற்றும் நடவடிக்கை நடவு பணிகள் உள்ளிட்டவை விரைவில் கிராமப்புற தேவை மற்றும் நகர்ப்புற செலவினங்களை ஒருங்கிணைக்கும் என்ற எதிர்பார்ப்பை எழுப்பி இருப்பதாக ரிசர்வ் வங்கி தனது மாதாந்திர அறிக்கையில் கூறி இருக்கிறது. புவிசார் அரசியல் செயல்பாடுகளில் காணப்படும் நாக்-ஆன் விளைவுகள் (Knock-on effects) பல துறைகளில் எதிரொலித்துள்ளன.

இது நாட்டின் பொருளாதார மீட்சியின் வேகத்தைக் குறைப்பதாகவும் ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது. இந்த பெரும் தாக்கம் மற்றும் மந்தநிலை அச்சங்கள் இருக்கும் போதிலும், சில சாதகமான விளைவுகள் பொருளாதாரத்தை மீளச் செய்து இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாற உதவும் என்று ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது. உலக அளவிலும், இந்தியாவிலும் விநியோக சங்கிலி அழுத்தங்கள் உச்சத்தில் உள்ளன, இதனால் பணவீக்க அழுத்தங்களின் முக்கிய ஆதாரம் குறையக் கூடும்.

சமீபத்திய வாரங்களில் காணப்பட்ட பொருட்களின் விலை மிதமானது விநியோகச் சங்கிலி அழுத்தங்களைத் தளர்த்துவதுடன் சேர்ந்து நீடித்தால், சமீபத்திய பணவீக்கத்தின் மோசமான எழுச்சி முடிந்துவிடும் என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறி இருக்கிறது.

இந்தியாவின் வருடாந்திர நுகர்வோர் பணவீக்கம் தொடர்ந்து ஆறாவது மாதமாக 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதை சமீபத்திய தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன. பலவீனமான உலகளாவிய குறிப்புகள் மற்றும் நிதிச் சந்தைகளில் அதிக ஆபத்து இருந்த போதிலும், இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளது. எனவே அமெரிக்க டாலரின் வலிமைக்கு எதிராக ரூபாயின் மதிப்பு விரைவில் இயல்புக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் (CAD) அதிக உலகளாவிய கச்சா விலையின் தாக்கத்தைக் குறிப்பிடும் RBI, 2022/23-ல் எண்ணெய் விலை பீப்பாய்க்குச் சராசரியாக $105 ஆக இருந்தால், CAD மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதமாக விரிவடையும் என்று கூறியது. அதே போல இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 இல் சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் வெளிநாட்டுக் கடன் குறைவாகவே உள்ளது மற்றும் உண்மையில் மார்ச் 2021 மற்றும் மார்ச் 2022க்கு இடையில் குறைந்துள்ளது என்றும் ரிசர்வ் வாங்கி அறிக்கையில் கூறி இருக்கிறது.

First published:

Tags: Indian economy, RBI