• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • அந்நிய செலாவணி பெறுவதில் இந்தியா மீண்டும் முதல் இடம்: உலக வங்கி

அந்நிய செலாவணி பெறுவதில் இந்தியா மீண்டும் முதல் இடம்: உலக வங்கி

2016-ம் ஆண்டு 62.7 பில்லியன் டாலரும், 2017-ம் ஆண்டு 65.3 பில்லியன் டாலரும் அந்நிய செலாவணியை இந்தியா பெற்றுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடப்பு ஆண்டிலும் அந்நிய செலாவணி பெறுவதில் இந்தியா முதல் இடத்தினை பிடிக்கும் என்று உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்நிய செலாவணி குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு ஆண்டிலும் இந்தியா 80 பில்லியன் டாலருடன் முதல் இடத்தினை பிடிக்கும் என்று கூறியுள்ளது.

இந்தியாவினை தொடர்ந்து சீனா(67 பில்லியன் டாலர்), மெக்ஸிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் (34 பில்லியன் டாலர்), எகிப்து (26 பில்லியன் டாலர்) அந்நிய செலாவணியை பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

2018-ம் ஆண்டு வளரும் நாடுகளின் அந்நிய செலாவணி 10.8 சதவீதம் உயர்ந்து 528 பில்லியன் டாலராக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இதுவே 2017-ம் ஆண்டு 7.8 சதவீத அதிகரித்து இருந்தது.

2016-ம் ஆண்டு 62.7 பில்லியன் டாலரும், 2017-ம் ஆண்டு 65.3 பில்லியன் டாலரும் அந்நிய செலாவணியை இந்தியா பெற்றுள்ளது. இது இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியில் 2.7 சதவீதம் ஆகும்.

மேலும் பார்க்க: கவுண்டமணியின் அரசியல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: