ஈரான் கச்சா எண்ணெய்க்கு இணையாக இந்தியாவிற்கு தேவையான எண்ணெய்யை வெறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வோம் என்று பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஆனால் இந்தியா உட்பட சில நாடுகளுக்கு மட்டும் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அனுமதி தற்காலிகமாகப் பண்டமாற்று முறையில் அமெரிக்கா அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் மே 1-ம் தேதி முதல் ஈரானிலிருந்து எந்த ஒரு நாடும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யக்கூடாது. மீறி ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டால் அந்த நாட்டின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்திய அரசு ஈரானிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. பொருளாதார தடைக்குப் பிறகு ஈரானின், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைந்துள்ளது.
தற்போது முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதால், பிற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
வெனிசுலா மற்றும் ஈரான் என இரண்டு நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இரண்டு நாடுகளுமே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வலம் அதிகமுள்ள நாடுகள்.
பொருளாதாரத் தடையால் அந்த இரண்டு நாடுகளிலிருந்து இந்தியாவால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யமுடியாது. எனவே மாற்று நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வோம் என்று பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மறுபக்கம் கச்சா எண்ணெய் விலை பேரல் 80 டாலர் வரை விரைவில் உயரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் போது அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.