ஹோம் /நியூஸ் /வணிகம் /

பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்திய இந்தியா!

பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்திய இந்தியா!

டிரேட் கேட்

டிரேட் கேட்

பாகிஸ்தானின் சலாமாபாத் மற்றும் இந்தியாவின் சக்கந்தா-பாக் பகுதியில் எல்லை தாண்டிய வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடைபெறும் பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் சலாமாபாத் மற்றும் இந்தியாவின் சக்கந்தா-பாக் பகுதியில் எல்லை தாண்டிய வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இதைப் பயன்படுத்தி பயங்கரவாத ஆயுதங்கள், கள்ளப் பணம் போன்றவை இந்தியாவிற்குள் ஊடுருவுவதால் தற்காலிகமாக இந்த எல்லைப் பகுதியில் செய்யப்படும் வர்த்தகத்தை நாளை முதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையில் இந்த வர்த்தக ஒப்பந்தம் 2005-2006 காலகட்டங்களில் போடப்பட்டது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையில் குறிப்பிட்ட சில பொருட்களை மட்டும் வரி விலக்குடன் ஏற்றுமதி செய்துக்கொள்ள முடியும்.

இந்த வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் பல முறை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:

First published:

Tags: India, Pakistan News in Tamil, Trade