முகப்பு /செய்தி /வணிகம் / மதுப்பிரியர்களை மடக்கிப்போட்ட ஸ்காட்ச் விஸ்கி.. இறக்குமதியில் பிரான்ஸை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

மதுப்பிரியர்களை மடக்கிப்போட்ட ஸ்காட்ச் விஸ்கி.. இறக்குமதியில் பிரான்ஸை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

ஸ்டாக்ச் விஸ்கி

ஸ்டாக்ச் விஸ்கி

ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதியில் இந்தியாவிற்கு அடுத்த இடங்களில் பிரான்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இருக்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதியில் கடந்த ஆண்டு பிரான்சை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது இந்தியா. முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டு 60 விழுக்காடு ஸ்காட்ச் இறக்குமதி அதிகரித்துள்ளது.

இந்தியா பல்வேறு பொருட்களின் மிகச்சிறந்த சர்வதேச சந்தையாக இருக்கிறது. மதுபான இறக்குமதியிலும் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது அண்மையில் நிரூபணமாகியிருக்கிறது. ஆம் ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதியில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது இந்தியா. உலகம் முழுவதும் மதுப்பிரியர்கள் விரும்பி குடிக்கும் மது ஸ்காட்ச் விஸ்கி. ஸ்காட்லாண்டில் பிரத்யேகமாக தயாரிக்கப்படும் இந்த ஸ்காட்ச் விஸ்கிக்கு உலகம் முழுவதும் ஏராளான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஸ்காட்லாண்டில் இருந்து உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவும் பல ஆயிரம் கோடிக்கு ஸ்காட்ச் விஸ்கியை இறக்குமதி செய்கிறது. கடந்த ஆண்டு அபரிமிதமாக ஸ்காட்ச் விஸ்கியை இறக்குமதி செய்ததை தொடர்ந்து ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதியில் பிரான்சை பின்னுக்குத் தள்ளியுள்ளது இந்தியா.

ஸ்காட்ச் விஸ்கி அசோசியேசன் எனப்படும் SWA-வின் அறிக்கையின் படி கடந்த ஆண்டு இந்தியா 219 மில்லியன் விஸ்கி பாட்டில்களை இறக்குமதி செய்துள்ளது. இது 2021ஆம் ஆண்டை விட 60 விழுக்காடு அதிகம். கடந்த பத்தாண்டுகளோடு ஒப்பிடுகயைில் இது 200 விழுக்காடு வளர்ச்சி என்கிறது SWA-வின் அறிக்கை. இங்கிலாந்து-இந்தியா இடையே பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஸ்காட்ச் விஸ்கிக்கு 150 விழுக்காடாக இருந்த இறக்குமதி வரியில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வரும் காலங்களில் ஒரு பில்லியன் பவுண்ட் அளவிற்கு இறக்குமதி உயரும் என்றும் ஸ்காட்லாண்ட் விஸ்கி தயாரிப்பு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதியில் இந்தியாவிற்கு அடுத்த இடங்களில் பிரான்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இருக்கின்றன. உலக அளவில் ஸ்காட்ச் விஸ்கியை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ஆண்டிற்கு 1,053 மில்லியன் பவுண்ட் அளவிற்கு அமெரிக்கா ஸ்காட்ச் விஸ்கியை இறக்குமதி செய்கிறது.

ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி இங்கிலாந்திற்கு பல ஆயிரம் கோடி அந்நிய செலவாணியையும், ஆயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கும் முக்கியமான ஏற்றுமதி தொழில் என்பதால் இந்த வளர்ச்சி இங்கிலாந்திற்கு மிகவும் முக்கியம் என்கிறார் இங்கிலாந்தின் வர்த்தகத்துறை அமைச்சர் நைஜல் ஹடல்ஸ்டன். அதனால் ஸ்காட்ச் விஸ்கி தயாரிக்கும் தொழிலுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் கூறுகிறார்.

2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் பவுண்ட் அளவிற்கு ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இலக்கை எட்டிவிடுவோம் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார் வர்த்தக அமைச்சர் நைஜல் ஹடல்ஸ்டன்.


First published:

Tags: Alcohol consumption, England, Export and Import Tax, Scotland