ஹோம் /நியூஸ் /வணிகம் /

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இனி ஈஸியா குடும்பத்துக்கு பணம் அனுப்பலாம்... சிங்கப்பூரின் PayNow உடன் இணையும் இந்தியாவின் UPI

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இனி ஈஸியா குடும்பத்துக்கு பணம் அனுப்பலாம்... சிங்கப்பூரின் PayNow உடன் இணையும் இந்தியாவின் UPI

UPI

UPI

இந்த அம்சம் வெளிவந்த பிறகு சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இந்தியர்கள் எவரும் இந்தியாவில் உள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மிக எளிதாக பணம் அனுப்ப முடியும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • international, Indiasingapore

  புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவும், சிங்கப்பூரும் தங்களின் ஃபாஸ்ட் பேமென்ட் சிஸ்டம்களான UPI மற்றும் PayNow ஆகியவற்றை கனெக்ட் செய்ய தேவையான தொழில்நுட்ப நடவடிக்கைகளை முடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான பண பரிமாற்றங்களுக்கு, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மற்றும் பேநவ் ஆகிய பேமென்ட் முறைகள் விரைவில் பயன்படுத்தப்படலாம். இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கணிசமாக உதவும். இந்த சேவை குறைந்த விலையில் வரும் அதே வேளையில், நிதி பரிமாற்றத்தை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் மற்றும் சிங்கப்பூரின் மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையமும் சேர்ந்து யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மற்றும் பேநவ் ஆகியவற்றை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

  இந்த நிலையில் இந்தியா - சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே மிகக் குறைந்த செலவில் எளிதாக பண பரிமாற்றங்களை செய்ய ஃபாஸ்ட் பேமென்ட் சிஸ்டம்களை விரைவில் கனெக்ட் செய்ய இரு நாடுகளும் தயாராகி விட்டதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய ஹை கமிஷ்னர் பி.குமரன் தகவல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மேலும் பேசிய இந்திய உயரதிகாரியான குமரன், சிங்கப்பூர் தனது PayNow-ஐ நம்முடைய UPI-உடன் விரைவில் இணைக்க விரும்புகிறது. இந்த திட்டம் இன்னும் சில வாரங்களில் முழுவதுமாக நிறைவடைய உள்ளது.

  இந்த அம்சம் வெளிவந்த பிறகு சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இந்தியர்கள் எவரும் இந்தியாவில் உள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மிக எளிதாக பணம் அனுப்ப முடியும் என்று கூறினார். இந்த திட்டம் முழுமையாக முடிந்து அமல்படுத்த தயாரானவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி அறிவிப்பார் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன் மொபைல் ஃபோன் நம்பர்களைபயன்படுத்தி இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கும், UPI விரிச்சுவல் பேமென்ட் அட்ரஸை பயன்படுத்தி சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கும் பணத்தை எளிதாக ட்ரான்ஸ்ஃபர் செய்ய முடியும்.

  இந்தியாவில் 69 சதவீத குடும்பத்தினர்கள் நிதி பாதுகாப்பு இன்றி உள்ளனர் - ஆய்வில் தகவல்!

  இந்தியாவின் சொந்த கார்ட் பேமென்ட் நெட்வொர்க்கான RuPay-வை போன்றது சிங்கப்பூரின் PayNow. இது மற்ற சில ஆசிய நாடுகளுடன் லிங்க் கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் UPI - சிங்கப்பூரின் PayNow இணைப்பு நடைமுறைக்கு வந்தால் சிங்கப்பூர் வழியே இந்தியாவை எளிதாக இணைக்க முடியும்.

  தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஆன்லைனில் தொடங்குவது இவ்வளவு ஈஸியா! மத்திய அரசின் புதிய அப்டேட்

  இதனிடையே சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பேசுகையில் இந்தியா - சிங்கப்பூர் இடையிலான இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் பணமாற்று நிறுவனங்கள் (Money transfer companies) தற்போது விதித்து வரும் கட்டணத்தைவிட மிக குறைந்த செலவில் பணம் அனுப்பலாம்.

  ஒரே தடவையில் மிகப்பெரிய தொகையை அனுப்பி வந்தவர்கள் இனி கவலையின்றி சிறு சிறு தொகைகளை அனுப்பலாம். இதற்கான கட்டணம் குறைவாக தான் இருக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மலேசியா, தாய்லாந்து நாடுகள் இந்தியாவின் யுபிஐ கட்டணமுறையை தங்கள் நாட்டு மின்கட்டண முறைகளுடன் இணைத்துள்ள நிலையில் பிலிப்பைன்ஸ் நாடும் இந்த விஷயத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: India, UPI