இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2024 ஆம் நிதியாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் என உலக வங்கி வெளியிட்டுள்ள உத்தேச அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பொருந்தொற்று ஏற்பட்டு கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் முடங்கியது. தொழில்கள் முடங்கியதால் உலகப் பொருளாதாரமே கடுமையான நெருக்கடியை சந்தித்தது. சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் என பாகுபாடில்லாமல் அனைத்து தொழில்களுமே பொருளாதர சிதைவிற்குள் சிக்கின. 2022 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து நெருக்கடிகள் தளர்ந்து. பொருளாதாரத்தில் உலக நாடுகள் சிறிதளவு ஏற்றத்தை சந்தித்து வருகின்றன.
ஆனால் இந்த ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகள் கடுமையான பொருளாதார சிக்கலை சந்திக்கும் என உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள ஊக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த ஊக அறிக்கையில் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்த போதிலும் இந்தியாவின் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில் எந்தெந்த நாடுகள் பொருளாதார வலிமையோடு இருக்கும், எந்தெந்த நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தை சந்திக்கும் என்பது குறித்த ஒரு ஊக அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இந்தியா நடப்பு நிதியாண்டிலும் சரி அடுத்து வரும் நிதியாண்டிலும் சரி வளர்ச்சியைத் தான் அடையும் என கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 விழுக்காடாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தாலும், அதில் சிறிய தொய்வு இருக்கும் என்றும், ஆனால் அடுத்த நிதியாண்டில் கணிக்கப்பட்ட அளவை விட இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நடப்பு நிதியாண்டில் கணிக்கப்பட்ட அளவை விட 1.7 விழுக்காடு குறைவாகவே இருக்கும் என்றும், அதே போல் அடுத்த நிதியாண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் சீரான வளர்ச்சியில் இருக்கும் என்றும் உலக வங்கியின் சர்வதேச பொருளாதார ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரம் உலகளாவிய பொருளாதார மந்தம் ஏற்றுமதி தொழிலில் மற்றும் முதலீட்டு துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகளின் அரசாங்கங்கள் உட்கட்டமைப்பு துறையில் அதிக அளவில் முதுலீடுகளை செய்வது தனியார் முதலீடுகளிலும் எதிரொலிக்கும் என்றும் உலக வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி தொடர்பான எதிர்மறையான ஊகங்கள் இந்தியாவில் எழுப்பப்பட்டு வந்தாலும், உலக நாடுகளின் பொருளாதார வலிமை மற்றும் வளர்ச்சி விகிதம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வரும் கால சர்வதேச பொருளாதாரம் குறித்து உலக வங்கி தனது ஆண்டறிக்கையில் தெளிவாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளார் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian economy