ஹோம் /நியூஸ் /வணிகம் /

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கல்வி, கற்றல் பின்னடைவுகளால் இந்தியாவின் ஜிடிபி-யில் பெரிய சரிவு ஏற்படும்:  ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வில் பகீர் தகவல்

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கல்வி, கற்றல் பின்னடைவுகளால் இந்தியாவின் ஜிடிபி-யில் பெரிய சரிவு ஏற்படும்:  ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வில் பகீர் தகவல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஜிடிபி என்று அழைக்கப்படும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கத்தினால் சரிவு கண்ட கல்வி மற்றும் கற்றல் பின்னடைவுகளினால் பெரிய பின்னடைவை  எதிர்நோக்கியுள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கியின் புதிய ஆய்வறிக்கை ஒன்று பகீர் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஜிடிபி என்று அழைக்கப்படும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கத்தினால் சரிவு கண்ட கல்வி மற்றும் கற்றல் பின்னடைவுகளினால் பெரிய பின்னடைவை  எதிர்நோக்கியுள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கியின் புதிய ஆய்வறிக்கை ஒன்று பகீர் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பினால் பெரிய அடி வாங்கிய கல்வி மற்றும் கற்றல் துறைகளினால் இளம் தலைமுறையினருக்கு ஏற்பட்ட பெரும் பாதிப்புகளின் முதல் அடியாக 2023-ம் ஆண்டு 10.5 பில்லியன் டாலர்கள் இந்திய பொருளாதாரம் பாதிப்படையும் என்றும், அப்படியே 2030 வரை பார்த்தோமானால் 99 பில்லியன் டாலர்கள் வரைக்கும் இந்தியப் பொருளாதாரம் பின்னடைவு காணும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆய்வு கூறுகிறது. இதனால் அடிமட்ட வளர்ச்சிப்போக்கிலிருந்து நாட்டின் ஜிடிபி 3.19% குறையும் என்கிறது இந்த ஆய்வு.

“கோவிட்-19-னால் மேற்கொள்ளப்பட்ட பள்ளி,கல்வி நிறுவனங்களின் மூடலினால் ஏற்படும் வருங்கால பொருளாதாரத் தாக்கம்” என்ற தலைப்பில் இந்த ஆய்வுக்கட்டுரை இந்த எச்சரிக்கையை ஒலித்துள்ளது. 2030ம் ஆண்டு வாக்கில் வருவாய் இழப்பினால் உலக ஜிடிபி 943 பில்லியன் டாலர்கள் பின்னடைவு காணும்போது இந்தச் சரிவில் இந்தியாவின் பங்களிப்பு 10% ஆக இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திறமையுள்ளவர்களுக்கான வேலை வாய்ப்பில் 1% பின்னடைவு ஏற்படும். அன்ஸ்கில்டு தொழிலாளர்களுக்கான அதாவது தினக்கூலி உள்ளிட்டவர்களுக்கான வேலை வாய்ப்பில் 2% சரிவு ஏற்படும். குறிப்பாக பெருந்தொற்றினால் கிராமப்புற கல்வி பேரடி வாங்கியுள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

கிராமப்புறங்களிலிருந்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லும் குறிப்பிடதகுந்த எண்ணிக்கை கொண்ட பொருளாதாரங்களில் இதன் பாதிப்பு மிகப்பெரியது, ஏனெனில் இவர்களுக்கு இணையதள இணைப்பு கிடையாது, ஆன்லைன் வகுப்புகளில் இவர்களால் இணைய முடியவில்லை.

கற்றலும் வருவாயும் குறைந்து போனதால் இந்த கல்வி கற்றல் துறையில் பெருந்தொற்று ஏற்படுத்திய பின்னடைவுகளினால் பாதிக்கப்பட்டோர் தினக்கூலிகளாக, சாதாரண தொழிலாளர்களாக பெருகுவார்கள் என்கிறது இந்த ஆய்வு, கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகள் மூடப்பட்டதால் ஏற்படும் சரிவின் தாக்கம் இனிதான் பெரிதாக தெரியவரும் என்கிறது ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு.

இந்தியாவின் பெரும்பகுதி உழைப்பாளிகள் அன்ஸ்கில்டு தொழிலாளர்களே ஏடிபி ஆய்வின் படி இதன் எண்ணிக்கை 408.4 மில்லியன்களாகும். மாறாக ஸ்கில்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை 72.65 மில்லியன் பேர்களே.

“2030-ல் தெற்காசியாவில் மிகப்பெரிய மாற்றம் என்றால் அது இந்தியாவில்தான். தெற்காசியாவிலேயே பெரிய அளவில் இந்தியாவில் 98.84.பில்லியன் டாலர்கள் ஜிடிபி குறையும். சதவீதமாகக் கூற வேண்டுமெனில் 2023-ல் 0.34% ஜிடிபி குறையும். 2026-ல் 1.36%, 2030-ல் 3.19%.

பள்ளிகளை மூடியதால் உலக அளவில் ஜிடிபி சரியும், வேலையின்மை பெருகும். ஜிடிபி இழப்புகளும், வேலையின்மையும் காலப்போக்கில் அதிகரிக்கும். உலக ஜிடிபி 2024-ல் 0.19%-ம், 2028-ல் 0.64%-ம் 2030-ல் 1.11%-ம் சரியும் என்கிறது இந்த ஆய்வு.

எனவே இளம் தலைமுறையினரின் கல்வி இடைவெளியைக் குறைக்கப் போக்க அரசு கூடுதல் நிதியை இந்தத் துறையில் ஒதுக்குவது அவசியம். குறிப்பாக கிராமபுறங்களில் கல்வி பாதிக்கப்பட்டவர்கள், ஏழைகள், நலிவுற்றவர்கள் ஆகியோருக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். பள்ளி படிக்கும் வயதில் இருக்கும் குழந்தைகளை தொடர்ந்து கல்வியில் நீடிக்கவைக்க அரசு உதவிகள் வழங்குவது அவசியம். பள்ளிகளிலிருந்து வெளியேறியவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகளை அரசு வழங்க வேண்டும் என்று இந்த ஆய்வறிக்கை பரிந்துரைகளையும் மேற்கொண்டுள்ளது.

First published:

Tags: Corona impact, Covid-19, GDP, Lockdown